திருமணங்கள் பகுதி-4

ப்ரஸுக்மந்தா தியாஸாநஸ்ய ஸக்ஷணி வரேபிர் வராகும் அபிஷுப்ரஸீதத .அஸ்மாகமிந்திர உபயம் ஜூஜோஷதி யத்சொளம்ய ஸ்யாந்த ஸோ புபோததி

இந்த மந்திரத்தில் என்ன சொல்லுகிறது என்றால் அன்பர்களே, தெரிந்துகொள்ளுங்கள்

ஒரு ஆண் மகனை பெற்றவர்கள்,தூது அனுப்பி, அந்த தூதுவராக செல்பவரிடம்,எங்களுக்கு நல்ல பெண்ணை நீங்கள் தேடி தரவேண்டும் என்று சொல்ல, அவரும் தனக்கு தெரிந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று, நான் ஒரு வரன் கொண்டுவந்திருக்கிறேன் என்று சொல்லுகிறார். பிறகு தெயவானுக்ராகம் உள்ளது நீங்கள் சென்று வாருங்கள் என்று சொல்லி அனுப்ப வேண்டும். போகின்றவர் அதாவது தூது செல்பவர் நல்லவராக இருக்கவேண்டும். இது மிகவும் முக்கியம். இன்று இதுபோல் ஆள் சில பேருக்குதான் கிடைக்கிறது. திருமணத்தின்போது செய்யும் ஹோமத்தில் கிடைக்கும் சோம ரசத்தை இந்திரன் வாங்கிக்கொள்ள ஆவலாக இருக்கிறபடியால் உங்கள் வீட்டில் உள்ள பெண்ணை திருமணம் செய்துவைக்க விரும்புகிறேன் என்று தூதுவர், பையனுக்காக, பெண்ணின் வீட்டில் போய் சொல்கிறார்.

நம் இந்து மதம் எப்படி சொல்லிகொடுக்கிறது பாருங்கள். நீங்கள் இதை எல்லாம் தெரிந்துகொள்ளாததாலும், உங்கள் குழந்தைகளுக்கு சொல்ல தெரியாததாலும்தான் இப்படி ஒரு சூழ்நிலை வந்தது நமது மதத்துக்கு அன்பர்களே.

Leave a comment