திருமணங்கள் பகுதி-5

திருமண மந்திரங்களின் அர்த்தம் தொடர்ச்சி.

தேவர்களே,எனக்கு ஹிதமான இவர்கள் பெண்ணின் தந்தையை நோக்கி செல்லும் மார்கங்கள் ,முள்ளும் கல்லும் இல்லாததாகவும் ஒழுங்காகவும் இருக்கும்படி செய்வீராக.அரிமா, பாகன், என்ற இந்த இரண்டு தேவர்களும் எங்களை நல்ல முறையில் சேர்த்து வைக்கட்டும். எங்களுடைய தாம்பத்தியம் ஒற்றுமையுடன் கூடியதாக இருக்கும்படி நீங்கள் அருள் புரிய வேண்டும்.

மேல்கண்டவாறு அனுப்பப்பட்ட பெரியோர்கள் பெண்ணின் அதாவது கன்னிகையின் தந்தையிடம் சென்று வரனுக்காக பெண் கேட்பார்கள்.அப்படியே ஆகட்டும். கன்யா தானன் செய்கிறேன் என்று பெண்ணின் அப்பா நமக்கு வாக்கு கொடுப்பார்.இதற்க்கு பிறகு வழக்கமான சில சடங்குகள் நடந்த பின் பெண்ணும் பிள்ளையும் கல்யாண மேடைக்கு வருவார்கள்.

கிழக்கு முகமாக வரன் அதாவது பையன் உட்காருவான்.அப்போது பெண்ணின் தந்தை தீர்த்தத்தால் அவனுடைய காலை அலம்புவார். அதற்கு அர்த்தம் என்னவென்றால்

என் காலில் சேர்க்கப்பட்ட ஐந்தே தீர்த்தம் எனது பகைவர்களை அழிபதாகுக. இந்த குளத்தில் நான் பிரும்ம தேச்ஜசுடன் இருப்பேனாக என்று சொல்லி வரன் வலது காலை நீட்ட வேண்டும்.

கன்யாதானம் செய்பவர் வரனை நோக்கி

விஷ்ணு ஸ்வரூபியாக இருக்கும் உங்களை அமர்வதற்காக இந்த ஆசனத்தை சமர்ப்பிக்கிறேன்

மகாவிஷ்ணுவான ஐந்தே வரனே நல்வரவு இந்த தீர்த்தத்தை உங்களுக்கு சமர்பிக்கிறேன்

பிறகு தயிர் தென் நெய் கலந்ததை ஒரு தடவை மந்திரம் சொல்லி கொடுப்பார்கள். இரண்டு தடவை மந்திரம் இல்லாமல் கொடுப்பார்கள். பிறகு தண்ணீர் அருந்தவேண்டும்.

Leave a comment