திருமண பொருத்தம் பார்க்கும்போது

திருமண பொருத்தம் பார்க்கும்போது நவாம்சம் மிகவும் முக்கியமான ஒன்று, நட்ச்சத்திர பொருத்தம் முக்கியம் அல்ல இது நிரூபிக்கப்பட்ட உண்மை.

இனி நவாம்சம் எப்படி பார்ப்பது பொருத்தம் பார்பதற்கு முன் ஒருவருடைய திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பார்க்க வேண்டும் இதற்கு நவாம்சம் மிக முக்கியம். ஆண் ஜாதகம் எனில் நவாம்சம் ஆண் ராசியில் வரவேண்டும் பெண் ஜாதகம் எனில் நவாம்சம் பெண் ராசியில் வரவேண்டும் இது 80% வரை பொருந்தும் நவாம்ச லக்னம் சரியாக வரவில்லை எனில் 4 நிமிடம் வரை பிறந்த நேரத்தை சரி செய்யவும்.

 

இனி முக்கியமான விசயத்திற்கு வருவோம் நவாம்சம் எப்படி பார்ப்பது ? எந்த ஜாதகமாக இருந்தாலும் நவாம்ச லக்னாதிபதி நவாம்ச லக்னத்தில் இருந்து 3/6/8/12ல் மறைய கூடாது. ஆண் ஜாதகம் எனில் சுக்கிரன் நவாம்சத்தில் 1/3/6/8/12ல் இருக்க கூடாது பெண் ஜாதகம் எனில் குரு நவாம்சத்தில் 3/6/8/12ல் இருக்க கூடாது. மேலும் எந்த ஜாதகமாக இருந்தாலும் ஜென்ம லக்னத்திற்கு நவாம்ச லக்னம் 8ல் வரகூடாது மேலும் பெண்கள் ஜாதகத்தில் உள்ள நவாம்சதில் இருந்து ஆணின் நவாம்ச லக்னம் 8ல் வரகூடாது மிக மிக முக்கியமானது ராசி சக்கரதில் பலவீனம் அடைந்த கிரகத்தின் வீட்டில் நவாம்ச சக்கரம் வந்தால் எந்த பலனும் இல்லை.

 

நவாம்சத்தில் மூன்று அல்லது எட்டில் நிற்கும் கிரக திசையில் வாழ்கை துணைக்கு மரணம் அல்லது வாழ்கை துணையை பிரியவேண்டிவரும் ஆறில் நிற்கும் கிரகம் சம்பந்தப்பட்ட நோய் வாழ்கை துணைக்கு வரும் 12ல் நிற்கும் கிரக திசை/புத்தியில் வாழ்கை துணையை விட்டு வெகு தொலைவுக்கு செல்ல வேண்டி வரும் நவாம்ச லக்னாதிபதி 6ல் இருந்தால் வாழ்க்கை முழுவதும் சண்டை சச்சச்சரவு தான்.

நவாம்சத்தில் இரண்டாம் இடத்தில உள்ள கிரக எண்ணிக்கை கொண்டு ஜாதகனின் இரகசிய தொடர்பை கூறலாம். ஆண் /பெண் இருவருக்கும் இது பொருந்தும் (பலம் பெற்ற குருவின் பார்வை இதை மாற்றும் )