திரேகாண பதிவு

ஜோதிட நண்பர்கள் கேட்டு கொண்டதற்க்கு கேட்டதற்க்கு இணங்கி இரண்டு ஆண்டுக்கு முன்பு எழுதிய 22ம் திரேகாண பதிவு இது…

ஆயுளை நிர்ணயம் செய்யும் 22ம் திரேகாணம்
மேஷத்தில் திரேகாணம் 22 ஆக அமைந்தால்
1] மேஷலக்னத்தின் முதல் திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால்
அவருக்கு பாவர்கள் சேர்க்கையும் பார்வையும் 8ம் இடம் பெற அவருக்கு ஜலம். சர்ப்பம், விஷம் பித்தம் போன்றதால் மரணம் சம்பவிக்கும்
2] மேஷத்தின் மத்திய [நடு] திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால்
அவருக்கு ஜலம், புழுக்கள்,வனம் போன்றதில் மரணம் சம்பவிக்கும்
3] மேஷத்தின் மூன்றாம் திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால்
அவருக்கு குளம்,குட்டை,ஆறு,கிணறு,வாய்க்கால்,சமுத்திரம் போன்றதில் விழுந்து மரணத்தை தழுவும் நிலையை தரும்
ரிஷபத்தில் திரேகாணம் 22 ஆக அமைந்தால்
4] ரிஷபத்தில் முதல் திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால்
அவருக்கு நாற்கால் ஜீவராசிகளால் தான் அதிகமாக மரணத்தை தழுவும் அமைப்பு இருக்கும்
5] ரிஷபம் மத்திய [நடு] திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால்
அவருக்கு பித்தத்தால் அல்லது நெருப்பால் ,வாதம் முதலிய கொடுநோய் மற்றும் திருடர்களால் தாக்கப்பட்டு மரணம் அடையும் தன்மையை தரும்
6] ரிஷபம் மூன்றாம் திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால்
அவருக்கு வாகன விபத்து யுத்தங்களில் ஆயுதத்தால் தாக்கப்பட்டும் குதிரை மாடு அல்லது எருமை போன்ற நாற்கால் ஜீவராசிகளால் ஏற்படும் துன்பத்தால் மரணம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்
மிதுனம் திரேகாணம் 22 ஆக அமைந்தால்
7] மிதுனம் முதல் திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால்
அவருக்கு காசநோய் ,ஆஸ்துமா,இலைப்பு போன்ற சளித்தொல்லைகள் மூலமாக ஜாதகருக்கு மரணத்தை தரும் அமைப்பு ஆகும்
8] மிதுனம் மத்திய [நடு] திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால்
அவருக்கு ஜன்னி உபாதையால் , விஷம் ,மாடு,எருமையால் மசைநாய் கடி , மதம்பிடித்த யானையால் தாக்குதல் ஆவதால் மரணம் ஏற்படும் வாய்ப்பு உண்டு
9] மிதுனம் கடைசி திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால்
அவருக்கு காற்று [வாயு] வாள் , நாற்கால் ஜீவராசிகள்,யானையால் தாக்கப்படுதல் மலையில் அல்லது உயரமான இட்த்தில் இருந்து விழுதல் போன்றதால் வனத்தில் காணாமல் போய் விழுந்து மரணம் அடைதல் போன்றதால் உயிருக்கு பங்கம் தரும்
கடகம் திரேகாணம் 22 ஆக அமைந்தால்
10] கடகம் முதல் திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால்
அவருக்கு முதலை போன்ற துஷ்டர்கள் போன்றோர்களால் சுவப்னம் போன்றவற்றால் மரணம் சம்பவிக்கும்
11] கடகம் மத்திய [நடு] திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால்
அவருக்கு அடிதடி அல்லது இடி விழுதல் விஷம் உண்டல் பயத்தின் காரணமாக மரணம் சம்பவிக்கும்
12] கடகம் கடைசி திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால்
அவருக்கு ஈரல் பாதிப்படைதல் குஷ்டம் போன்ற பிரமேகத்தின் காரணமாக மரணம் ஏற்படுத்தும்
சிம்மம் திரேகாணம் 22 ஆக அமைந்தால்
13] சிம்மத்தின் முதல் திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால்
அவருக்கு ஜலத்தில் விழுவதால் ,பாதரோகத்தால் , மரணத்தை தரும் அமைப்பாகும்
14] சிம்மத்தின் மத்திய [நடு] திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால்
அவருக்கு ஜல முதலிய கண்டமும் வனப்பிரதேசத்தில் மரணமும் சம்பவிக்கும்
15] சிம்மத்தின் கடைசி திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு விஷத்தால் அல்லது ஆயுதத்தால் அடிதடியால் மோதலால் விழுதலால் மரணம் ஏற்படும் அமைப்பு தரும்.
கன்னி திரேகாணம் 22 ஆக அமைந்தால்
16] கன்னியின் முதல் திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு தலைநோய் வாதநோய் போன்றதால் சரீரம் கெட்டு மரணம் ஏற்படுத்தும்
17] கன்னியின் மத்திய [நடு] உறக்கத்தில் மற்றும் துஷ்டஜந்துக்கள் ,வனத்தில் மிருக தாக்குதல் மற்றும் அரச தண்டனைக்கு உட்படுதல் போன்றதால் மரணம் சம்பவிக்கும்
18] கன்னியின் கடைசி திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு அன்பாக வளர்க்கப்பட நாற்கால் ஜீவராசியால் அல்லது ஆசைநாயகியால் சமைக்கப்பட்ட உணவின் விஷத்தின் காரணமாக அல்லது மது [சோமபானம்] அளவிற்க்கு அதிகமாக அருந்துவதால் மரணம் ஏற்படும்
துலாம் திரேகாணம் 22 ஆக அமைந்தால்
19] துலாம் முதல் திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு
ஸ்திரிகளால் அல்லது நாற்கால் ஜீவராசியால் கீழே விழுவதால் மரணத்தை தழுவும் நிலையை தரும்
20] துலாம் மத்திய [நடு] திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு ரத்தம் கெட்டுப்போய் அதை நிவர்த்தி செய்ய முடியாத காரணத்தால் மரணம் சம்பவிக்கும்
21] துலாம் கடைசி திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு
சர்ப்பம், தேள், விஷகடியாலும் ஜலத்தால் அல்லது ஜலத்தில் வாழும் ஜந்துக்களால் மரணத்தை தரும்
விருட்சிகம் திரேகாணம் 22 ஆக அமைந்தால்
22] விருட்சிகம் முதல் திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு விஷத்தால் அல்லது ஆயுதம் தாக்கப்பட்டதால் ஸ்திரிகள் சமையலில் விஷத்தை வைப்பதால் மரணம் தரும்
23] விருட்சிகம் மத்திய [நடு] திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு மூத்திரம் கெடுவதால் உடலில் உப்பு சம்பந்தமான நோய் போன்றதால் மரணம் சம்பவிக்கும்
24] விருட்சிகம் கடைசி திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு கணுக்கால் எலும்பு முறிவில் ஏற்படும் உபத்திரம் அல்லது கல்லால் அடிவாங்கியோ மரணத்தை தரும் அமைப்பு அமையும்
தனுசு திரேகாணம் 22 ஆக அமைந்தால்
25] தனுசு முதல் திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு குஷ்டநோய் மற்றும் வாதநோய் போன்றதால் மரணம் அமையும்
26] தனுசு மத்திய [நடு] திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு விஷத்தால் அல்லது வாதநோய் போன்ற வியாதியால் மரணம் அமையும்
27] தனுசு கடைசி திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு ஜலமத்தியில் அல்லது ஜலத்தில் விழுந்தும் அல்லது ரத்தம் கெட்டுபோன நோயாலும் மரணத்தை தழுவுவர்
மகரம் திரேகாணம் 22 ஆக அமைந்தால்
28] மகரம் முதல் திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு அரசதண்டனை அல்லது காட்டு விலங்குகள் தாக்கப்படதால் ஜலத்தில் வாழும் ஜந்துக்களால் மற்றும் சர்ப்ப கணம் [பாம்பால் ஆபத்து] போன்றவற்றில் மரணத்தை தரும் சம்பவங்கள் மூலமாக மரணம் ஏற்படுத்தும் [தொடைகளுக்கு நடுவில் ஏற்படும் மோகத்தால் வரும் வியாதியை இங்கே சேர்ந்து கவனிக்கலாம்]
29] மகரம் மத்திய [நடு] திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு நெருப்பு மற்றும் ஆயுதம் போன்றதால் திருடர்களால்தாக்கப்பட்டும் [மனிதர்கள் இல்லாமல் தெய்வங்கள் மற்றும் தேவர்களின் கோபத்தால் கூட மரணத்தை உண்டாக்கும் என்கிறது சில நூல்கள்]
30] மகரம் கடைசி திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு ஸ்திரிகளின் சாபத்தை வாங்கி அதனால் ஏற்படும் பாதிப்பால் மரணத்தை தரும்
கும்பம் திரேகாணம் 22 ஆக அமைந்தால்
31] கும்பத்தின் முதல் திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு ஸ்திரிகளால் ஏற்படும் ஆபத்தால் ஜலத்தால் ரத்தம் கெட்டுபோவதால் மலையில் வனத்தில் வாழும் மிருகங்கள் போன்ற காரணத்தால் மரணத்தை ஏற்படுத்தும்
32] கும்பத்தின் மத்திய [நடு] திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு ஸ்திரிகள் மூலமான துன்பத்தினால் அல்லது உடலில் ஏற்படும் தோல்நோய் சமபந்தமான காரணமும் அமைந்து மரணம் தரும் அமைப்பாகும்
33] கும்பத்தின் கடைசி திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு சொந்தபந்தத்தாலும் அல்லது செல்ல பிராணியாக இருக்கும் சொந்த நாயாலும் உயிருக்கு பங்கம் தரும்
மீனம் திரேகாணம் 22 ஆக அமைந்தால்
34] மீனம் முதல் திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு
குன்மம், ரத்தமாக போகும் வயிற்றுப்போக்கு வயிற்றில் ஏற்படும் மர்ம நோய் போன்றதால் மரணத்தை தரும்
35] மீனத்தின் மத்திய [நடு] திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு ஜலத்தின் மத்தியில் பரிசல் படகு கப்பல் போன்றவை மூழ்குவதாலும் ஜல கண்டத்தாலும் மரணம் சமப்விக்கும்
36] மீனத்தின் கடைசி திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு மோகத்தால் வரும் கெட்ட நோய் அல்லது மர்மநோய் கொண்டும் மரணம் தரும்
குறிப்பு:–
புதியதாய் ஜோதிடத்தை பயில்வோர்கள்
இந்த திரேகாணம் என்பது பற்றி கொஞ்சம் அடிப்படையாக அனுபவ ஜோதிடர்களை அணுகி கலந்தாய்வுகள் செய்து மேலும் தன்னை சுற்றி மரணத்தை தழுவிய சிலர் ஜாதகங்களை எல்லாம் ஆய்வுக்கு எடுத்து தன்னுடைய ஜோதிடபுலமையை விருத்தி செய்யுங்கள்
அதைவிட முக்கியம் உங்களிடத்தில் ஜோதிடம் பார்க்க வரும் வாடிக்கையாளர்களை 22 ம் திரேகாணத்தை பற்றி பேசி மிரள வைக்காதீர்கள் ..எதையும் கொஞ்சம் பக்குவமாக கையாள வேண்டும்.. உங்கள் அனுபவத்தில் ஒரு விஷயம் பொருந்தி போனால் மட்டுமே அடித்து பேசி பலாபாலனை சொல்லலாம்!!