தெய்வத்துக்கு சக்தி எப்படி வருகிறது

தெய்வத்துக்கு சக்தி எப்படி வருகிறது.

ஒரு கோயில் கட்டுவதாக இருந்தால், முதலில் பாலாலயம் என்று ஒரு விழா நடத்துவார்கள்.

பிறகு அந்த விக்ரகத்துக்கு மருந்து சாமான்கள் முறைப்படி செய்து அதை பூசுவார்கள்.இதற்க்கு முன்பு, எந்த தெய்வத்தின் விக்ரகமோ அந்த தெய்வத்தின் எந்திரம் ஒன்றை பல நாட்கள் பூஜை செய்து பவர் கொடுத்து, அதையும் அங்கு வைத்துவிடுவார்கள்.

இப்போது யாக சாலைகளில் யாகங்கள் நடந்து கலச தீர்த்தத்தை , கோபுரத்தின் உச்சியில் இருக்கும் கலசங்களுக்கு விடுவார்கள். அப்போது, மூலவருக்கு வியர்க்கும்.

ஆகாசத்தில் ஆங்காங்கே இருக்கும் சக்திகளை, இந்த கலசம் வாங்கி, எந்திரத்தின் மூலமாக விக்ரகத்துக்கு கொடுத்து வருகிறது.

இதனால்தான், நாம் வேண்டிக்கொள்ளும்போது, அந்த கோயில்களில் நமக்கு காரியங்கள் நடக்கிறது. ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கிறது.

பூஜை முறையாக செய்யாத கோயில்களில், கூட்டம் வருவதில்லை. என்ன காரணம் என்றால், யாருக்கும் காரியங்கள் கைகூடாமல் இருப்பதுதான்.

இதற்கு முக்கிய காரணம், அந்த கோயில்களில் முறையாக பூஜைகள் நடப்பதில்லை.

அதனால்தான் மந்திர சக்திகளின் அடையாளமாக, கும்பாபிஷேகத்தின்போது, கோபுரத்தின் உச்சிக்கு மேலே, இன்றும் கருட பகவான் மூன்று தடவை வலம் வருவதை கண்கூடாக பார்க்கலாம் அன்பர்களே.