தெய்வீகத் திருமணங்கள் ஒரு பார்வை.

1.கும்பகோணத்தில் ஹேம மகரிஷியின் புதல்வி கோமளவல்லியை சாரங்கபாணி பெருமாள் மணந்தார்.

2.ஒப்பிலியப்பன் கோயில் – ஸ்ரீமன் நாராயணனின் விருப்பத்துக்கு இணங்க ,மார்கண்டேய மகரிஷி தனது புதல்வியை அதாவது பூமா தேவியை, இவளுக்கு உப்பு போட்டு சமைக்க தெரியாது ஐந்து வயதுதான் ஆகிறது .எனவே திருமனம்செய்துகொண்ட பிறகு இந்த கோயிலில் இன்னும் உப்பு போட்டு சமையல் படைக்கப்படுவதில்லை. ஆனால் அங்கே சாப்பிடும்போது நமக்கு தெரியாது. வெளியில் வந்து சாப்பிட்டால் உப்பு இல்லாதது நன்கு தெரியும்

3.திருப்பதியில் ஆகாசராஜனின் புத்ரியான பத்மாவதியை , ஸ்ரீநிவாசப் பெருமாள் வேத மந்திரத்துடன் திருமணம்.

4.சென்னைக்கு அருகில் திருவிடந்தை என்னும் கோயிலில் காலவ மகரிஷியின் 360 புதல்விகளை ,தினமும் ஒரு பெண் வீதம் வருடம் பூராவும் தனித்தனியாக திருமணம் செய்துகொண்டு, நித்திய கல்யாண பெருமாளாக,அனைவரையும் ஒரே பெண்ணாக்கி அகிலவல்லி என்ற பெயருடன் காட்சி.

5.திருவஹீந்திரபுரத்தில், கடலூர் பக்கத்தில் ஒரு ரிஷியின் புதல்வியான ஹேமாம்புஜவள்ளியை தேவநாதப் பெருமான் திருமணம் செய்துகொண்டார்.

6.பெரியாழ்வாரின் புதல்வி ஆண்டாளை, ஸ்ரீவில்லிபுத்தூர் ரெங்கநாதர் திருமணம் செய்துகொண்டார்.

7.திருக்கோழியில்,சோழ மன்னனின் பெண்ணான கமலவல்லி நாச்சியாரை அழகிய மணவாளன் திருமணம் செய்துகொண்டார்.

8.திருநாரையூரில் ,மேதாவி ரிஷியின் பெண்ணான (வளர்ப்பு பெண்) வஞ்சுலவள்ளியை, தனது ஐந்து ரூபத்தில் திருமணம்

9.துவாரகையில், கிருஷ்ணன் ருக்குமணியை திருமணம்

10.பார்வதியை சிவபெருமான் திருமணம்

11.மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும், திருமணம் மதுரையில்

12.வள்ளியையும் தேவசெனாவையும் முருகன் திருமணம்.

இந்த அனைத்துமே, வேத மந்திரங்கள் முழங்க, சாஸ்திரப்படி சம்பிரதாயங்களின் படி,அம்மி மிதித்து அருந்ததி பார்த்து, மாலை மாத்தி ஊஞ்சல் ஆடி, மாங்கல்ய தாரணம் ஆகி, ஹோமங்கள் செய்துதான் செய்தார்கள்.

ஆகையால் நாமும் அதுபோல்தான் செய்யவேண்டும். இது ஆயிரம் காலத்து பயிர் ஆகும். மீதி எல்லாம் திருமணம் கிடையாது.

இதன் விவரம் தொடர்ந்து வரும். எப்படி திருமணம் என்ன அர்த்தம் என்பதெல்லாம் நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள் அன்பர்களே

Leave a comment