நற்பலன் தரும் கனவுகள்

 • ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.
 • வானவில்லை கனவில் கண்டால் பணம்,செல்வாக்கு அதிகரிக்கும்.பதவி உயர்வு கிடைக்கும்.
 • வானில் நிலவைப் பார்ப்பது ஒளி கனவு கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.
 • விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால்,சேமிப்பு மேலும் பெருகும்.
 • திருமணம் ஆகாதோர் பாம்பு கடித்து ரெத்தம் வருவது போல் கனவு கண்டால்,சீக்கிரம் திருமணம் நிகழும்,திருமணம் ஆனோர்க்கு செல்வம் வந்து சேரும்.
 • ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும்.
 • இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.
 • சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலைக் கிடைக்கும்.
 • நண்பர் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும்.
 • தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும்.
 • இறந்தவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டால் அதிகாரம், பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.
 • திருமண கோலத்தைக் கனவில் கண்டால், சமூகத்தில் நம் மதிப்பு உயரும்.
 • தற்கொலை செய்து கொள்ளுவது போல கனவு கண்டால் நெருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி,நன்மை பிறக்கும்.
 • உயரத்திலிருந்து விழுவது போல கனவு கண்டால்பணம்,பாராட்டு குவியும்.
 • கர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நலம் அதிகரிக்கும்.
 • ஆமை, மீன், தவளை போன்ற நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் கவலைகள் பறந்து போகும்.நெஞ்சில் நிம்மதி பிறக்கும்.
 • மயில், வானம்பாடியைக் கனவில் கண்டால் தம்பதியினரிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
 • கழுகைக் கனவில் கண்டால் உங்களைத் தேடி அதிஷ்டம் வருவதன் அறிகுறி.கடல் கடந்து சென்று பொருள் ஈட்டப்போவது உறுதி.
 • கழுதை, குதிரையைக் கனவில் கண்டால் வழக்குகள் சாதகமாக ஜெயமாகும்.
 • கழுதையைக் கனவில் கண்டால் அதிஷ்டம் ஏற்படும்.எதிர்கால முன்னேற்றம் சம்பந்தமான முயற்ச்சிகள் பலிதமாகும்.
 • திருமணம் ஆகாத பெண்,கழுதையைக் கண்டால் தேர்ந்தெடுக்கக் கூடிய கணவர் திருப்திகரமாக அமைவார்.ஆனால் பணவசதி குறைவுடையவராக இருப்பார்.
 • மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் பெரிய அதிஷ்டம் அடிக்கும்.
 • வாத்து, குயிலை கனவில் கண்டால் பெரிய அதிஷ்டம் அடிக்கும். மலத்தை மிதிப்பது போல் கனவு கண்டால், சுபச்செலவுகள் ஏற்படும்.
 • பசுமாடு கனவில் வந்தால் பணம் பெருகும், ஆனால் சுபச்செலவு வந்து சேரும்.
 • எருமை மாடு கனவில் வந்தால் நன்மை வந்து சேரும்.
 • அதிபயங்கரமான கனவு கண்டால் அவை எப்படிபட்டவையாக இருந்தாலும் சரி,குடும்பத்தில் அமைதி,நன்மை ஏற்படும்.
 • ஒருவர் தன் கனவில் நிலா,சூரியன், கடவுள், ராஜாக்கள், உயிருடன், இருக்கும் நெருங்கிய நண்பர்கள், பசு, நெருப்பு, வழிப்பாட்டுக்கூடங்கள் ஆகியவற்றைக் கண்டால் ஆரோக்கியமும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
 • பூக்கள், சுத்தமான உடைகள், இறைச்சி , மீன், பழங்கள், தேனீக்கள் , பாம்பு ஆகியவற்றை கனவில் கண்டால் தீராத நோய் நீங்கும்.
 • செய்யக்கூடாத காரியங்களைச் செய்யவது, உடல் அழுக்கேறி இருப்பது, இறந்து போவது, அழுவது, சமைக்காத பச்சை இறைச்சியைச் சாப்பிடுவது போல கனவில் கண்டால் நோய்கள் இருந்தால் நீங்குவதுடன் நிறைய பணம் வந்து சேரும்.
 • தண்ணீர் தேங்கியிருப்பது போல் கனவு கண்டால் புதிய நண்பர்கள் நிறையக் கிடைப்பார்கள்.இளம் வயதினர்க்கு, காதலன்,காதலி கிடைப்பார்கள்.
 • தேங்கிய நீர் நல்ல தண்ணீர் என்றால் நல்லது. தண்ணீர் நிறைந்த குளத்தை,நீர் நிலையை கனவில் கண்டால் பெரிய மனிதர்களின் நட்பு ஏற்படும்.நன்மை கிடைக்கும்.
 • தாமரைப் பூவை கனவில் கண்டால் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.நிறைய பணம் சேரும்.கடன் தீரும்.வியாபாரத்தில் அபிவிருத்தி காணும்.
 • குளத்தில் கால் கழுவுவது போல் கனவு கண்டால் கஷ்டம் மற்றும் நோய் நீங்கும்,உற்சாகம் கூடும்.நல்ல செய்திகள் வரும்.
 • குளத்தில் குளிப்பது போல் கனவு கண்டால் கடவுள் அருள் நிறைய கிடைக்கும்.
 • வீட்டைச்சுற்றி தண்ணீர் தேங்கியிருப்பது போல் கனவில் வந்தால் பொருளாதார வளம் ஏற்படும்.
 • மூதாதையர்கள் கனவில் வந்தால் அல்லது ஆசீர்வாதம் செய்தால் நன்மை பிறக்கும்.பிரச்சனைகள் இருந்தால் நல்ல முடிவு ஏற்படும்.
 • கனவில் இறந்து போன உறவினர்கள் பேசினால்,உதவிக்கு நிறையப்பேர் வருவார்கள். நல்ல பெறும், புகழும் கூடும்.
 • கனவில் உறவினர் உங்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டால் பணம் வரும்.எதிர்பாராத பணம், புகழ் குவியும். பிரிந்து போன குடும்பங்கள் ஒன்று கூடும். உறவினர்களிடையே இருந்த விரிசல் மறையும்.
 • கனவில் மூதாதையர்கள் உறங்குவதாகக் கண்டால்,வரவிருந்த ஆபத்திலிருந்து தப்பிவிடுவீர்கள்.
 • மூதாதையர் உங்களுக்கு சாப்பாடு பரிமாருவதாக கனவு கண்டால், சுப செய்தி வந்து சேரும்.
 • கனவில் நீங்கள் கிழிந்த உடையை உடுத்திஇருந்ததாக வந்தால் பணம் வந்து சேரும். எந்த செயலிலும் தனியாக செயல்பட்டு வெற்றி வாகை சூடுவீர்கள்.
 • கனவில் பாம்பு வந்தால் கடவுள் உங்களுக்கு துணை நிற்பார்.அதிஷ்டம் ஏற்படும். பெண்கள் கனவில் பாம்பு வந்தால் ஆயுள் கூடும்.கடன் பிரச்சனைகள் தீர்ந்து முடிவுக்கு வரும்.
 • கனவில் யானை வந்தால் அரசாங்க உதவிக் கிடைக்கும்.நீண்ட நாட்களாக நடந்து வந்த வழக்கில் சாதகமாக தீர்ப்பு கிடைக்கும்.
 • யானை மாலை போடுவது போல் கனவு கண்டால் பதவி உயர்வு கிடைக்கும்.பிரிந்த கணவன் மனைவி இடையே உறவு ஏற்படும்.இளம் தலைமுறையினராக இருந்தால் திருமணம் நடக்கும்.
 • ஊதுபத்தி புகை வருவது போல் கனவு கண்டால் துக்கம் நீங்கும்.
 • தீயை கனவில் கண்டால் நோய் விலகும்.புதிய உற்சாகம் பிறக்கும்.
 • உங்கள் கனவில் திருவிழாவைக் கண்டால் புது வீடு வாங்கும் யோகம் ஏற்படும். வாகன யோகமும் உண்டாகும்.சொத்து சேரும்.
 • நகைகள் வாங்குவது போல் கனவு கண்டால் புதிய தொழில் தொடங்குவீர்கள். இல்லாவிட்டால் இருக்கின்ற தொழிலில் மேன்மை உண்டாகும்.
 • நகைகளை அடகு வைப்பது போல் கனவு வந்தால் சொத்து விற்பனை ஆகும்.
 • நகைகளை களவு போவது போல் கனவு கண்டால்,பணவரவு உண்டாகும்.
 • வாகனத்தில் நீண்ட தூரம் பயணம் செய்வது போல் கனவு கண்டால், உல்லாசப்பயணம் மேற்க்கொள்ளுவீர்கள்.புகழ் அதிகரிக்கும்.