பங்குனி உத்திரம்

3.4.2015 .இன்று பங்குனி உத்திரம்.

ஸ்ரீரங்கத்தில் வருடத்துக்கு ஒரு நாள் மட்டுமே ,அதாவது இன்று மட்டும் , ரெங்கநாதர் ,ரெங்கநாயகி தாயார் இருவரும் சேர்ந்து காட்சி கொடுக்கும் நாள் ஆகும்.

இன்று மாலை 5 மணிக்குமேல் இரவு 11 மணி வரை காட்சி தருவார்கள்.நீங்கள் தரிசித்தால் உங்கள் குடும்பங்களில் உடன் கல்யாண நிகழ்ச்சி நடக்கும் .நீங்கள் பார்க்க செல்லும்போது கீழ்கண்ட பாட்டை பாடவும். சுவாமி முன் பாடவேண்டும் என்பது இல்லை. கியூவில் சென்றுகொண்டு இருக்கும்போதே பாடலாம் .

மலைமகளும் அரனும் ஒரு வடம் தொட்டு ஆட்ட
வாசவனும் சசியும் ஒரு வடம் தொட்டு ஆட்ட
கலைமகளும் அயனும் ஒரு வடம் தொட்டு ஆட்ட
கந்தனும் வள்ளியும் கலந்து ஒரு வடம் தொட்டு ஆட்ட
அலைமகரப் பாற்கடலுள் அவதரித்த
மலர் மகளும் நிலமகளும் இரு மருங்கில் ஆட எங்கள்
தண் அரங்க மணவாளர் ஆடிர் ஊசல்.

பொருள் – பார்வதியும் அவளது கணவன் சிவனும் ஒரு சங்கிலியைப் பிடித்து ஆட்டி விடுகின்றனர்.
இந்திரனும் அவன் மனைவி சசியும் ஒரு சங்கிலியைப் பிடித்து ஆட்டி விடுகின்றனர்.
சரஸ்வதியும் நான்முகனும் ஒரு சங்கிலியை பிடித்து ஆட்டி விடுகின்றனர்.
முருகனும் வள்ளியும் ஒன்றாக நின்று ஒரு சங்கிலியைப் பிடித்து ஆட்டி விடுகின்றனர்.
அலைகள் மற்றும் சுறா மீன்கள் நிறைந்த திருப்பாற்கடலில் தோன்றிய தாமரையில் வாசம் செய்கின்ற மஹாலக்ஷ்மி, பூமிப்பிராட்டி, ஆயர்களின் அன்பால் வளர்க்கப்பட்ட நீளாதேவி ஆகியோர் உன்னுடைய இரண்டு பக்கத்திலும் அமர்ந்து ஆடும்படியாக, குளிர்ந்த திருவரங்கத்தில் வாசம் செய்யும் எங்களது அழகிய மணவாளா! ஊஞ்சல் ஆடுவாயாக.