படிப்பு அல்லது கல்விபற்றி

படிப்பு அல்லது கல்விபற்றி விளக்க வேண்டுகிறேன் குருவே!
குரு–கல்விக்குரியவன் புதன். இவனுக்கு வித்யாகாரகன் என்றும் காரணப்பெயருண்டு.
ஒரு ஜாதகத்தில் புதன் எங்கிருக்கிறானென்பதைக்கவனிக்கவேண்டும்.நல்லஇடங்களில்(1,2,4,5,9,8,10,11)அமைய படிப்பு நல்லவிதத்திலமையும்.பதனுடன் சூரியன் சேர்ந்திருந்தால் மேல் படிப்பு இராது.ஆனால்இந்தப்புதசூரியனை குரு
ஜெனனகாலத்தில் பார்த்திருந்தால் பட்டப்படிப்பு உண்டு.
இந்திராகாந்தி ஜாதகத்தில் சூரிய புதன் சேர்க்கை விருச்சிகத்திலுள்ளது.குரு ரிஷபத்திலிருந்து பார்த்ததால் நல்ல படிப்பு ஏற்பட்டது. அதேபோல ஸ்ரீசுப்ரமணியம் அவர்களுக்கும்மகரத்திலுள்ள சூரியபுதனை கன்னிகுரு பார்க்கிறார்.இவர் வக்கீலானார்.
குரு பார்வைஇல்லாவிடினும்,ஜெனனகாலத்தில் சூரியபுதன்சனி அல்லதுசூரியபுதராகு /கேது ஒன்றாக இருக்குமாகில் மிகவும் உயர்ந்த படிப்பு உண்டு. இதற்கு உதாரணம் சுபாஷ்சந்திரபோஸ்
புதசூரியராகு மகரத்தில்.எம்.ஏ படித்து ஐ.சி.எஸ்.தேறினார்.திரு.ஒய்.பி.சவானுக்கு கும்பத்தில் சூரிய
புதராகு.எல்.எல்.பி படித்தவர்.இதேஅமைவு மொரார்ஜிதேசாய்பெற்றதால்சிவில் சர்வீஸ் சேர்ந்து டிப்டி
கலெக்டரானார்.
புதன் ஆட்சி,உச்சம் பெற்றால்மட்டும் போதாது.குரு சேர்க்கை அல்லது பார்வைவேண்டும்.
அப்போதுதான் பட்டப்
படிப்பு உண்டு.