பணக்காரர் ஆகும் யோகம்

1] பாக்கியாதிபதி லாபாதிபாதிபதி உடன் சேர்ந்திருப்பது.
2] பாக்கியாதிபதி உடன் பத்தாம் அதிபதி சேர்க்கை
3] பாக்கியாதிபதியோடு சுகாதிபதி சேர்க்கை
4] பாக்கியாதிபதி உடன் பஞ்சமாதிபதி சேர்க்கை
5] பாக்கியாதிபதி லக்னாதிபதியோடு சேர்க்கை
6] பாக்கியாதிபதி தனஅதிபதி சம்பந்தம் பெறல்
7] பத்தாம் வீட்டுக்கு உடையவர் லாபாதிபதியோடு சம்பந்தம்
8] பத்தாம் வீட்டுக்கு உடையவர் சுகாதிபதியோடு சேர்தல்
9] பத்தாம் வீட்டுக்கு உடையவர் லக்னாதிபதியோடு சேர்க்கை
10] பத்துக்கு உடையவர் ஐந்துக்கு உடையவரோடு கூடல்
11] பத்தாம் வீட்டுக்கு உடையவர் தனாதிபதியோடு சேர்தல்
12] லாபாதிபதி தனாதிபதி உடன் சேர்தல்
13] லாபாதிபதி சுகாதிபதியுடன் சேர்க்கை பெறுவது
14] லாபாதிபதி லக்ன அதிபதியுடன் சேர்க்கை
15] லாபாதிபதி 5 ம் வீட்டுக்கு உடையவரோடு சேருவது
16] லக்ன அதிபதி தனாதிபதி உடன் சேர்க்கை
17] லக்ன அதிபதி சுகாதிபதி உடன் சேர்க்கை
18] லக்ன அதிபதி ஐந்துக்கு உடையவரோடு சேர்வது
19] தன அதிபதி சுகாதிபதி சேர்க்கை
20] தனாதிபதி ஐந்தாம் வீட்டுக்கு உரியவரோடு சேர்க்கை
21] சுகாதிபதி ஐந்தாம் வீட்டுக்கு உடையவர் சேர்க்கை மேற்கண்ட அமைப்பு உடையவர்களுக்கு எல்லாம் விஷேச பணக்கார யோகம் உண்டாங்க…

இந்த சேர்க்கை உடைய அமைப்பு, 2,4,5,ஆகிய ஸ்தானங்களில் அமைந்தால் முழு பலனை அளிக்கும்  உத்தம தனயோகமாங்க…
7 ம் ஸ்தானத்தில் அமைந்து இருந்தால் பூரணபலனை தருமாம்.
8,12, ம் ஸ்தானத்தில் அமைந்தால் பாதி பலன் தான் கிடைக்குமாங்க
6 ல் அமைந்து இருந்தால் கால் பங்கு பலன் மட்டுமே.
மற்றொரு விஷயங்க…இந்த இரண்டு கோள்களும் 5 பாகைக்குள் அமைந்து இருந்தால் விஷேச யோகத்தை நிச்சயம் தரும்.

Leave a comment