பரிகாரம் இல்லாத வாஸ்து

அனைவரும் பின்பற்ற கூடிய வகையில் மிகவும் எளிமையான முறையில் தீர்வுகளை கொடுக்கக்கூடிய ” பரிகாரம் இல்லாத வாஸ்து ” வாஸ்து சாஸ்திரம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா நண்பர்களே … எத்தனை பேருக்கு வாஸ்து சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது ? இருப்பினும் பலருக்கு இருக்கத் தான் செய்கிறது. வாஸ்து சாஸ்திரம் என்பது சாதாரண விஷயம் கிடையாது. வாஸ்து சாஸ்திரம் என்பது சூரியனுக்கு கீழ் வசிக்ககக்கூடிய அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவானது. நம் வீட்டிற்குள்ளேயே பஞ்ச பூதங்கள் குடி கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் கூரை போட்டு மூடிய ஒரு அமைப்பாக வீடு இருப்பதால், அது ஒரு தனி உலகமாக செயல்படும். அதனால் பஞ்ச பூதங்கள் இருக்கும் வீட்டில் நல்லது கெட்டதை தீர்மானிக்க வாஸ்து பெரிதும் உதவி புரியும். வீட்டின் ஒவ்வொரு பகுதியும் எப்படி இருக்க வேண்டும், எந்த திசையை நோக்கி இருக்க வேண்டும், எந்த திசையில் எந்த அறை இருக்க வேண்டும், எந்த பொருட்கள் வைக்க வேண்டும், எந்த பொருட்களை வைக்கக் கூடாது என்று ஒரு பெரிய பட்டியேலே இருக்கிறது. அப்படி தான் வீட்டில் உள்ள தலைவாசல் கதவும். வீட்டின் தலைவாசல் தான் முக்கிய ஆற்றல் திறனை நம் வீட்டிற்குள் கொண்டு வருகிறது. வாஸ்து பற்றிய பொதுவான கருத்துகள் – வட கிழக்கில் ஹால் – தென் கிழக்கில் கிச்சன் – தென் மேற்கில் பெட்ரூம் – வடமேற்கில் டாய்லெட் இவை மட்டும் சரியாக இருந்தாலே வீடு வாஸ்து படி உள்ளது என்று நினைத்துக் கொள்கிறார்கள். இது முற்றிலும் தவறான கருத்து. வாஸ்து என்பது இதற்கெல்லாம் அப்பாற்பட்டு பல விஷயங்கள் உள்ளன. அதில் குறிப்பாக சில விஷயங்களை மட்டும் கடைபிடித்தாலே நல்ல ஆரோக்கியமான வாழ முடியும் என்பது அனுபவ பூர்வமான உண்மை. அதில் முக்கியமாக வீட்டோட தலைவாசல் பார்க்க வேண்டும். தலைவாசல் அமைப்பு முறை பற்றிய விளக்கம் வடக்கு பார்த்த கட்டடத்திற்கு தலைவாசல் வடக்கு திசையில் கிழக்கு திசைக்கு ஒட்டியவாறு அமைக்க வேண்டும். கிழக்கு பார்த்த கட்டடத்திற்கு தலைவாசல் கிழக்கு திசையில் வடக்கு திசைக்கு ஒட்டியவாறு அமைக்க வேண்டும். தெற்கு பார்த்த கட்டிடத்திற்கு தலைவாசல் தெற்கு திசையில் கிழக்கு திசைக்கு ஒட்டியவாறு அமைக்க வேண்டும். மேற்கு பார்த்த கட்டடத்திற்கு தலைவாசல் மேற்கு திசையில் வடக்கு திசைக்கு ஒட்டியவாறு அமைக்க வேண்டும். இரண்டாவதாக வடக்கும் கிழக்கும் பொது சுவர் இருக்கவே கூடாது மற்றும் காம்பவுண்ட் சுவர் அவசியம் இருக்க வேண்டும். மூன்றாவதாக வடக்கும் கிழக்கும் ஜன்னல்கள் அவசியம் அதிலும் குறிப்பாக 24 × 7 திறந்திருப்பது ரொம்ப ரொம்ப முக்கியம். நான்காவதாக வடகிழக்கு படிக்கட்டு இல்லாத அமைப்பில் இருக்க வேண்டும். ஐந்தாவதாக தெருக்குத்து மற்றும் தெருப்பார்வை அவசியம் பார்க்க வேண்டும். ( நல்ல தெருக்குத்து கெட்ட தெருக்குத்து என்பதை ஒரு நல்ல வாஸ்து நிபுணர் ஆலோசனை பெற்று கொள்வது சாலச் சிறந்தது) இவைகளை கடைபிடித்தாலே அருமையான வாழ்க்கை