பிதுர் தோஷத்தை முறியடித்தல்

எனது தந்தை பிதுர் தோஷத்தை முறியடித்தவர் ஆவார்.

இவரது தந்தை எனது தாத்தா ,என் அப்பாவிற்கு நான்கு வயது நடந்தபோதே காலமானார். பிறகு அப்பாவிற்கு பூணல் கல்யாணம் செய்து ,திருவானைக்கோயில் பாடசாலையில் சேர்த்துவிட்டார்கள்.பதினெட்டு வயதுமுதல் தொழிலுக்கு வந்துவிட்டார். இன்னும் போய் கொண்டு இருக்கிறார்.இந்த வயதிலும்.

யாரிடமும் காசு தன இஷ்டத்துக்கு கேட்கமாட்டார். அனுசரித்து கொடுப்பதை வாங்குவார்.ஒத்துகொண்டால் சரியாக சென்றுவிடுவார்.அவர்களுக்கு கவலைகளை கொடுக்கமாட்டார்
இவரே , கர்த்தாவின் வீட்டில் சென்று வேலை செய்வார்.

தனுது தந்தைக்கு வருடா வருடம் சரியாக செய்துவிடுவார்.

சுமார் அனாதையாக இறந்தவர்கள் தனது வாழ்க்கையில் காசு வாங்காமலே, இவரே அந்த பிணத்தை மந்திரம் சொல்லி அடக்கம் செய்துவிடுவார்.

வெளியூரில் இருந்து திருச்சி வந்தவர்கள், உடன் வீடு கிடைக்காமல் இருக்கும்போது, அவர்கள் வீடு தெவசம் வந்துவிட்டால், யாரோ செய்கிற திதியை, எங்கள் வீட்டுக்கு வரச்சொல்லி, சாப்பாடு தக்ஷிணை எல்லாத்துக்கும் அந்த காலத்திலேயே குறைவாக இருவருக்கு வெறும் பத்துரூபாய் மட்டுமே வாங்குவார்.

அன்றைய தேதியில் அடுத்தவர் வாங்கியது ரூபாய் 150
சாப்பாடு தாங்கும் இடம் உள்பட.என் தந்தை வாங்கியது வெறும் பத்துரூபாய்

இதுபோல் நிறைய செய்து பிதுர் தோஷத்தை சாட்டை அடி அடித்து விரட்டினார்.

என் தந்தை எந்த கோயிலுக்கும், ஊருக்கும், நதிகளுக்கு, சென்றதே இல்லை. காவிரியை தவிர . சதா அடுத்தவருக்கு உழைப்பு உழைப்பு இதுதான் அவரது தாரக மந்திரம். பொய் சொல்லமாட்டார், திருடமாடார், பணத்துக்கு ஆசை படமாட்டார்.

தனது குடும்பத்தை விட அடுத்த குடும்பதுக்க்காகவே உழைத்தவர்.

இதனால் பிதுர் தோஷம் முறியடிக்கப்பட்டது./. வீடு வாசல் இல்லை அதுதான். நாங்கள் அதுக்கு வருத்தப்படவில்லை.

நாங்கள் மூன்று ஆண்களும் நான்கு தங்கைகளும், திருமணம், மக்கட்பேறு , பிறகு அந்த குழந்தைக்கு திருமணம் என்று நல்லபடியாக ஆண்டவன் செய்து வருகிறான் அன்பர்களே.

ஆகவே, மனதை தூய்மையாக வைத்து இருங்கள். கோயிலுக்கு செல்வதைவிட, இதுதான் முக்கியம் ஆகும் .

Leave a comment