பித்ரு தோஷம் என்றால் என்ன. யார் பித்ரு – ஒரு பார்வை

பித்ரு தோஷம் உள்ள ஜாதகத்துக்கு, பரிகாரமாக ராமேஸ்வரம், காளஹஸ்தி, கயா, காசி, தென்பொன்பரப்பி,மதுராந்தகம், ஏரி காத்த ராமர், இன்னும் பல இடங்களை சொல்லுவார்கள். ஸ்ரீ வாஞ்சியம், திலதர்பனபுரி, என்று சொல்லிக்கொண்டே போகலாம். அநேகம் பேர், திருநாகேஸ்வரம்,காளஹஸ்தி, சென்று வந்துவிட்டார்கள். ஆனாலும் தோஷம் போனதாக தெரியவில்லை. என்ன காரணம் இதில் பலவிதமான கருத்துக்கள் அபிப்பிராயங்கள் இருக்கின்றன. கோயிலுக்கு சென்றாலும், வீட்டில் செய்தாலும் தோஷம் போகவேண்டும். – போகிறது சிலபேருக்கு.பல பேருக்குபோவதில்லை. ஏன் – இதுதான் கேள்வி நன்றாக புரிந்துகொள்ளுங்கள்/ நீங்கள் அனுப்பும் தபாலோ மணியார்டரோ, திரும்ப வந்தால், என்ன அர்த்தம், அவர்கள் அங்கு இல்லை என்று அர்த்தம். அதுபோல்தான் நீங்கள் எந்த இடத்தில் செய்தாலும், அது அவர்களை சென்று அடைய வேண்டும். அப்போது தோஷம் போய்விடுகிறது. அவருக்கு போய் சேரவில்லை என்றால்., 1.அவர் அங்கு இல்லை அல்லது விலாசம் தவறு. அதுபோல, நாம் பூஜையை சரியாக செய்யவில்லை அல்லது அவர்கள் பித்துரு லோகத்தில் இல்லை. சரியாக போய்விட்டால் நமக்கும் சந்தோஷம்தான். சரியாகவில்லை என்பவர்களுக்கு

===============================

பித்ருக்கள், சிலசமயம், அவர்களுக்கு அதிக ஆசையினால், மீண்டும் அவர்கள், அதே குடும்பத்தில் பிறப்பதாக ஐதீகம். இப்போ அந்த பித்ரு, நமது குடும்பத்தில், ஏதாவது ஒரு உறவில் வந்து இருக்கிறார்கள். இவர்கள் எப்போதும் அடுத்தவர்களுக்கு கெடுதல்தான் செய்வார்கள். தன்னை திருத்திக்கொள்ளமாட்டார்கள். எல்லாம் எனக்கு தெரியும் என்பார்கள். நீங்கள் செய்யும் பரிகாரம் பயன்படாது என்பது, அந்த பித்ருவேஇங்குவந்து,இப்படி பிறந்து இருப்பதால், அவருக்கு போய்சேரவில்லைஅல்லவா. இப்போ இங்கே, எதற்கெடுத்தாலும், தனது தவறை உணராமல்,அடுத்தவரையே குறை சொல்லிக்கொண்டு,அடுத்தவர் வாழ்ந்தால் ஐந்து நாள் பட்டினி கிடந்து, நம்மை பத்தி அடுத்தவரிடம் கோழிமூட்டுகிறாரே, இவர்தான் அந்த பித்ரு. ஆகவே, இங்கே இவர் தன்னை திருத்திக்கொள்ளாத வரைக்கும் பித்ரு தோஷம் போகவேபோகாது என்பதனை மறக்கவேண்டாம். யார் தனது தவறை ஒப்புக்கொள்ள மனசு வராமல், அடுத்தவரையே குறை சொல்கிறார்களோ, அந்த வீட்டில் பித்ரு தோஷம் போகாது. எந்த கோயில் சென்றாலும், இந்த ஜன்மாவில் போகாது. இவர்தான் பித்ரு என்று நினைத்து, இவர் என்று திருந்துகிறாரோ, அன்று பித்ரு தோஷம் போகும் அன்பர்களே