பித்ரு தோஷம் போக

பித்ரு தோஷம் போக, காசே செலவில்லாமல் போகவேண்டும் என்றால், ஒரே வழி, இதுதான். நீங்கள் இப்படி செய்வதில்லை. அதனால்தான் நமக்கும் போகவில்லை. நீங்கள் ஒருவருக்கு உதவி செய்தால், உங்களுக்கு ஒருவர் உதவி செய்ய வருவார் அல்லவா. இது புரிகிறதா. அப்போ உங்கள் பித்ரு தோஷம் போக,இதுபோல் செய்யவும். ==================================================

உங்கள குலதெய்வம் கோயில், அடுத்து உங்கள் இஷ்ட தெய்வம் கோயில், இரண்டு இடத்திலு, இதுபோல், கற்பூரம் காண்பிக்கும்போது வேண்டி வாருங்கள். உடன் பித்ரு தோஷம் போகும்.

==================================================

இறைவா, நான் முன் ஜன்மத்தில் எந்த வீட்டில் பிறந்தேன் என்று உனக்குத்தான தெரியும். ஆகவே, அங்கே அவர்கள், பித்ரு தோஷத்தால் சிரமப்படுவார்கள் இல்லையா. ஆகவே, நானும் ஒரு பித்ருதானே.நான் இப்போ அந்த குடும்பத்தை வாழ்த்துகிறேன். இறைவா, அவர்களை சுகமாக வைக்கவேண்டுமாய் உன்னை கேட்டுக்கொள்கிறேன். இந்த ஜன்மாவில், இப்போது, எனது பித்துருவையும் நீ திருப்தி செய்து,எங்கள் குறைகளை போக்கவேண்டும். ===================================================