பித்ரு பூஜை

பித்ரு பூஜை செய்ய ஆசை உள்ளவர்களுக்கு ., ராமேஸ்வரம்

போகும் வழியில் தேவிபட்டினம் சென்று நவ பாஷாணம் என்று சொல்லகூடிய, அந்த நவகிரகங்களை வேண்டிக்கொண்டு, ராமேஸ்வரம் வரவேண்டும்.

முதலில் நீங்கள் ராமேஸ்வரம் சென்று , இரவு சுவாமி தரிசனம் செய்து தங்கவேண்டும் . மறு நாள் காலை தனுஷ்கோடி , சென்று ,அங்கு குளித்துவிட்டு ,அதாவது சங்கல்ப்பம் செய்தவுடன், கடலில் குளித்து முடிந்தால் 36 தடவை ,தலை முழுகி குளிக்கவேண்டும்.குறைந்த தடவையாக 6 தடவை.

பிறகு அங்கு இருக்கும் மண்ணை கொஞ்சம் கையில் எடுத்து,அதை மூன்று பாகமாக பிரித்து பிடித்து வைக்கவேண்டும்.

முக்கோண வடிவில் இரண்டு ஒரே அளவு கொண்டதாகவும் மூன்றாவது கொஞ்சம் பெரிதாகவும் பிடித்து வைத்து, பிந்து மாதவன், சேது மாதவன், வேணி மாதவன் என்று அதற்க்கு ஆவாகனம் செய்து பூசை அங்கேயே செய்யவேண்டும்.

இந்த இடத்தில் கோ தானம் போன்றவைகளை செய்யவேண்டும். பிறகு அங்கேயே , பிந்து மாதவனையும், சேது மாதவனையும், அந்த ஐயரிடம் கொடுத்துவிட்டு, பெரிதாக உள்ள வேணி மாதவனை நாம் ஒரு துணியில் வைத்துக்கொண்டு ராமேஸ்வரம் வந்துவிடவேண்டும்.

இங்கு வந்து அக்னி தீர்த்தம் என்று சொல்கிற கடலில் குளிக்கவேண்டும். பிறகு கோயிலுக்கு சென்று 22 கிணற்றில் குளிக்கவேண்டும்.

பிறகு இங்கே தனியாக அவரவர் பிதுர்களுக்கு ஐயரை வைத்து, 16 பிண்டம் பிடித்து , வழிபடவேண்டும்.

இதை பிறகு அக்னி தீர்த்த ராமேஸ்வரம் கடலிலேயே கரைத்துவிடவேண்டும். இப்போது குளிக்கக்கூடாது .

பிறகு வேணி மாதவனை எடுத்துக்கொண்டு நம் வீடு வந்துவிடவேண்டும்.

நீங்கள் காசி செல்லும் தேதி வரை அதை வீட்டில் வைத்து தினமும் பூ சமர்ப்பித்து ,ஊதுபத்தி ஏத்தி வைத்து சாம்பிராணி காட்டி ,நிவேதனம் செய்துவரவேண்டும். காசி புறப்படும் அன்று, பாயாசம் வைத்து சமர்ப்பிக்கவேண்டும்.

பூஜைகளை முடித்து, தனுஷ்கோடியில் ,நீங்கள் மண்ணை கரைக்கும்போது கீழ்க்கண்டபடி செய்யவேண்டும்.

இந்த இடத்தில் ராமர் தனுது கோதண்டம் என்று சொல்லகூடிய தனுசை பூஜைசெய்தார். அதனால் இதற்க்கு தனுஷ்கோடி என்று பெயர் வந்தது .

முதலில் அவர் எப்படி போவது என்று யோசனை செய்தபோது,ஆழம் குறைவாக உள்ள பகுதியை, ஒரு தேவதை, அங்கு தோன்றி, அந்த பகுதியை காண்பித்தாள், .அவளுக்கு பிப்பளாகி என்று பெயர். இவளுக்கு சாப்பாடு ,அந்த கடல் மண்ணே ஆகும். ஆகையால் ராமர் செய்ததை போல் நாமும் இங்கு தனுசுக்கு பூஜை செய்து, கையில் மண்ணை எடுத்துக்கொண்டு, கடலில், பிப்பலாகியை வேண்டி, உனக்கு ஆகாரத்தை தருகிறேன். நீயும் எங்களது பாவத்தை இதுபோல் கரைத்துவிடவேண்டும் என்று சொல்லி, வேண்டி, மண்ணை கரைக்கவேண்டும். இங்கு வேண்டியது நிச்சயமாக நடக்கும் என்பது நம்பிக்கையாகும்.

இதுதான் முதன் முதலில் காசி யாத்திரைக்கு செய்யவேண்டிய வேலை ஆகும்.