பிறந்ததினாலேயே பிராமணம் ஆகிவிடமுடியாது

மதங்கன் என்பவன் ,தான் கடுமையாக தவத்தில் ஈடுபட்டான். தேவேந்திரன் என்று சொல்லகூடிய இந்திரன் , கடுமையாக தவம் இருக்கும் மதங்கனுக்கு என்ன வேண்டும், எதற்க்காக தவம் இப்படி கடுமையாக இருக்கிறாய் என்று கேட்டான்.

மதங்கன் தெரிவித்தான்,அதாவது தனக்கு பிராமணத்துவம் கிடைக்க வேண்டி தவம் செய்கிறேன் என்றான்.
தேவேந்திரன் அது கிடைக்காது என்று சொல்லிவிட்டான்.

மதங்கன் ஒற்றைக்காலில் மன உருதியுடன் பல ஆண்டுகள் திரும்பவும் தவம் இருந்தான். இப்போது இந்திரன் மீண்டும் அவனிடம் வந்து ,நீ எத்தனை தவம் இருந்தாலும் உனக்கு பிராமணத்துவம் இந்த ஜன்மாவில் கிடைக்காது. வேண்டாததை நீ விலைக்கு வாங்கினால் அதனால் உனக்கு துன்பமே மிஞ்சும் என்றான்.
இதற்கு விளக்கங்களை தேவேந்திரன் பின்வருமாறு சொல்கிறான்.

நமக்கு எது முடியுமோ அதில்தான் ஆசை வைக்கவேண்டும். முடியாததிலோ, அல்லது தெரியாததிலோ நாம் ஆசை வைத்தால், தீங்குதான் வரும் என்கிறான்.

அதாவது ,இப்போது நம்மையே எடுத்துக்கொள்ளுங்களேன். கடவுள் வரம் தருவதாக வைத்துக்கொள்வோம். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் போஸ்ட் எனக்கு வேண்டும் என்று கேட்டால் எப்படி இருக்கும் அன்பர்களே. சம்பந்தம் இல்லாதது, ஆனால், நமக்கு ஆசை மட்டும் அப்படி இருக்கிறது. இது வீண்தானே. நிர்வாகம் என்பது எத்தனை சிக்கல், சிரமம்,பொறுப்பு,அபாயமான போஸ்ட் ,இதெல்லாம் நமக்கு புரிவதால், நாம் கேட்கமாட்டோம். புரியாமல் ஒருவன் கேட்டால் எப்படியோ , அப்படி, இந்த மதங்கன், தனக்கு பிராமனத்துவம் வேண்டும் என்று கேட்கிறான். தரமுடியாது என்று தேவேந்திரன் சொல்கிறான். அதற்க்கு விளக்கத்தை பாருங்கள்.

சண்டாளனாக முப்பது பிறப்பு எடுத்து,அதன்பிறகு வைசிய பிறப்பு எடுத்து,அதில் அறுபது பிறப்பு முடிந்து, பிறகு, தாழ்ந்த பிராமணனாக பிறந்து,அதைபோல் இருநூறு ஜன்மா எடுத்துவிட்டு,அதன்பிறகு பிராமணப் பிறப்பிலேயே உயர்ந்த பிறப்பு கிடைக்கும். அப்படியே கிடைத்தாலும், அந்த உயர்ந்த பிராமனப்பிறப்பிலும், அவன் சரியாக இல்லை என்றால், அவனுக்கு நல்ல கதி இல்லை. ஆகவே, தரமுடியாது என்றான்.

அன்பர்களே, சரியாக புரிந்துகொள்ளுங்கள். பிறந்ததினாலேயே பிராமணம் ஆகிவிடமுடியாது. அப்படி பிறப்பதற்கே இப்படி உள்ளது. பிறகு பிறந்தவுடன், அவன் அதைபோல் நடக்க வேண்டும். இல்லையென்றால் அவன் தாழ்ந்தவனாகவே கருதப்படுகிறான். என்றால்,
இப்போ நீங்கள் எங்கே பிராமணனை பார்க்க முடியும்.

அதே நேரத்தில்,பிராமணத்துவம் அடைவதும் சிரமம் என்று தெரிகிறது. அப்போது கிடைத்ததை நாமே நழுவவிட்டுவிட்டோம் என்றால், நாமெல்லாம் கெட்டிக்காரர்களா, நமக்குள்ளேயே நாமே கேள்விகேட்டுக்கொள்ளவேண்டியதுதான்.ஒன்றும் செய்ய இயலாது அன்பர்களே.

பிராமணனை போற்றுபவன் சுகம் பெறுவான்.நிந்திப்பவன் துன்பம் அடைவான் . எதனால் என்றால், இந்தக் பூமியில் உள்ள, ஊர்வன,பறப்பன,ஓடுவன,நடப்பன,தவழ்வன,குதிப்பன, நீந்துவன ,இப்படி இருக்கும் ஒரு அறிவு முதல் ஐந்து அறிவு வரைக்கும், பிறகு ஆறாவது அறிவுக்கும் ., இந்த பிராமணனே பொறுப்பு வகிக்கிறான். இந்த பொறுப்பை இறைவன் அவனிடம் விட்டு இருக்கிறான். ஆகவே, இவன் திருப்தி அடைந்தால்தான், தேவர்களும், பித்ருக்களும் திருப்தி அடைவார்கள். ஆகையால், உனக்கு இது ஒத்து வராது, வேறு ஏதாவது கேள் என்றான்.
பிறகு மதங்கன் ,எனது புகழ் எப்போதும் அழியவேகூடாது என்ற வரம் கேட்டான். அதற்க்கு உடன் இந்திரன் அந்த வரத்தை கொடுத்தான். அதனால், இந்த பூமி இருக்கும் வரைக்கும், மதங்கா, உன்னை, பணம் காசு என்று சொல்லகூடிய செல்வத்தை குறித்து பூஜை செய்யும்போது, முதலில் உன்னையே பூஜை செய்வார்கள். நீ அதனால் சந்தொதேவன் என்ற புகழை அடைவாய் என்று ஆசீர்வதித்தான்.

கடைசியில் கிடைத்தது, பிராமனத்தை விட ஒசத்தியாகவே அவனுக்கு கிடைத்து இருக்கிறது. இருந்தபோதிலும் அவன் கேட்டது கிடைக்கவில்லை என்பதனை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அன்பர்களே.

Leave a comment