பிறப்பும், இறப்பும். ஒரு பதிவு.

நாம் பிறப்பதற்கு முன்னாள், எந்த வீட்டில் பிறக்கவேண்டும் என்கிறதை கடவுள் கையில் வைத்து இருக்கிறான். அந்த உரிமை நம்மிடம் இல்லை. இது பாவ புண்ணியத்தின் அடிப்படையில் இறைவனே கவனித்துக்கொள்கிறான்.

இந்த குழந்தை யாருக்கு எப்போது பிறக்கவேண்டும் என்பது கடவுளின் கணக்கு. அது அந்த குழந்தைக்கும், அவரது பெற்றோருக்கும் முன்ஜென்ம வரவு செலவு கணக்கின்படி நடக்கிறது.

நல்ல நேரம் இன்னும் வரவில்லை என்று சொல்லிவிட்டால், அதற்காக மனிதாபிமானம் வேண்டாமா., அந்த பெண் எத்தனை நேரம் பொறுக்கமுடியும்.

ஆகவே நாம் நினைக்கும்படி அது வராது என்கிறபோது அதைபற்றி நமக்கு கவலைப்பட ஒன்றுமே இல்லையே.

அதுபோல்தான் ஒரு வயதானவர், இறப்பதும் அது மனிதனின் கையில் இல்லை. எல்லாம் தெய்வத்தின் கணக்கே ஆகும்.

சில பழமொழிகள் எல்லாம் அந்த காலத்தில் ஒரு சில சந்தர்ப்பங்களில் நடந்ததால் அதேமாதிரி இன்றைக்கும் நடக்கும் என்று சொல்லிவிடமுடியாது.

பூராடம் நூலாடாது.,கேட்டை கோட்டை கட்டும்.ஐந்தாவது பெண் கெஞ்சினாலும் கிடைக்காது .பரணி தரணி ஆளும் .ரோகிணியில் பிறந்தால் மாமாவிற்கு ஆகாது .ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது., மூலம் மாமனாருக்கு ஆகாது. சனி பொனம் தனி போகாது ., சித்திரை அப்பன் தெருவிலே ., இதுபோல் சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த காலத்தில் இவை எல்லாம் தள்ளுபடி செய்தாகிவிட்டது.காலம் கம்ப்யூட்டர் காலம். அதற்க்கு தகுந்தால்போல்தான் உலக விஷயங்கள் இருக்கின்றன. என்கிறபோது இதெல்லாம் கண்டு பயப்பட தேவை இல்லை.

சித்திரையில் ஒரு குழந்தை பிறந்தால், அப்பாவிற்கு ஆகாது. = அப்படி ஒன்றுமே கிடையாது.

அனைத்துமே அவரவர்களின் ஜாதகப்படிதான் நடக்குமே தவிர., ஒன்றினால் ஒன்று நடப்பதில்லை. அனைத்தையும் இணைத்தே கடவுள் படைக்கிறான்.

காக்காய் உட்கார, பனங்காய் விழுந்ததுபோல் செயல்படலாமே தவிர., உறுதியாக இதனால்தான் என்று சொல்லவே முடியாது.

பல குடுபங்களில் நாம் பார்த்திருக்கிறேன். இந்த பழமொழியெல்லாம் தவிடுபொடி ஆகிவிட்டது.

ஆகவே இதுபோல் யாரும் கவலைப்பட தேவை இல்லையாம் அன்பர்களே.

எல்லாமே ஒரு தனி மனித பாவ புண்ணிய அமைப்பின்படிதான் ஜனனமும் மரணமும் என்பதனை நினைவில் கொள்க.

Leave a comment