பில்லி சூனியம் என்றாலென்ன.

பில்லி சூனியம் என்றாலென்ன .இதை படிக்கவும்.

இனி உங்களுக்கு இதுபோல் செய்வினை இருக்கிறது என்று யாராவது சொன்னால் உடன் பயப்படாதீர்கள்.

நான் புரியும்படி சொல்கிறேன் .

அதாவது நீங்கள் பிறந்தவுடன் உங்களுக்கு யாருமே இந்த உலகில் பில்லி சூனியம் செய்ய இயலாது.

ஏற்கனவே ,அதாவது, முன் ஜன்மத்தில் ,நீங்கள் யாரையாவது ஏமாற்றி இருந்தாலோ அல்லது வேறு வகையில் நீங்கள் இடைஞ்சலாக இருந்தாலோ, அப்போது, அவர்கள், செய்திருந்து, அதே ஜன்மத்தில் உங்களால் அவர்களுக்கு திருப்தி அடைந்துவிட்டால், கவலை இல்லை.

ஒரு வேலை கடைசிவரை உங்களால் திருப்தி இல்லாமல் இருக்குமேயானால், விட்ட குறை தொட்டகுறை என்றால்போல், உங்களை, அடுத்த ஜன்மாவில் அது பிடித்துக்கொள்ளும். அப்படி பிடிக்கும்படி இருந்தால்தான், நீங்கள் பிறக்கும்போதே அந்தவித கிரக அமைப்பில் பிறக்கவைப்பான் இறைவன்.

ஆனால், இந்த ஜன்மாவில் உங்களுக்கு யாரும் எதுவும் செய்ய இயலாது. ஒரு வேலை, நீங்கள் அடுத்தவரை ஏமாற்றினால், வருத்தப்பட்டவர்கள், ஏதாவது செய்தாலும், அது இந்த ஜன்மாவிர்க்குள் நீங்கள் சரிசெய்துவிடமுடியும். விட்டால் அது அடுத்த ஜன்மாவில்தான். இப்போது எதுவும் இல்லை.

இப்போ உடனுக்குடன் இதுபோல் உள்ளது என்றால் அன்பர்களே, ரோட்டில் ஒரு நபர் நடக்க முடியுமா, நீங்களே யோசியுங்கள். அனாவசியமாக பயப்படாதீர்கள்