பீஷ்ட்மாஷ்டமி

நாளை (27-Jan-2015) பீஷ்மாஷ்டமி தினம். பீஷ்மர் முக்தி அடைந்த நாள் ஆகும். இவர் நித்திய பிரும்மசாரி ஆவார். வர்க்கம் கிடையாது. ஆகையால், அப்பா அம்மா உள்ளவர்கள், இல்லாதவர்கள் அனைவரும் நாளை காலை குளித்துவிட்டு இவருக்கு கீழ்கண்ட மந்திரங்களை சொல்லி தர்ப்பணம் விட வேண்டும். அப்படி செய்வதால் இந்த ஒரு வருட பாபம் நம்மை விட்டு நீங்கிவிடும். செய்யாமல் இருந்தால், இந்த வருட புண்ணியம் நம்மை விட்டு போய்விடும் அன்பர்களே.

கையில் நீரை எடுத்துக்கொண்டு இதை சொல்லி கீழே விடவும் அவ்வளவுதான்.

வையாக்ரபாதி கோத்ராய ஸாங்க்ருதி ப்ரவராய ச
கங்காபுத்ராய பீஷ்மாய ஆஜன்ம பிரம்மசாரினே
பீஷ்மாயநமக – இதமர்க்யம் – 1 தடவை

அபுத்ராய ஜலம் தத்மி நமோ பீஷ்மாய வர்மனே
பீஷ்ம சாந்தனவோ வீர:சத்யவதி ஜிதேந்திரயக

ஆபி ரத்பி ரவாப்நோது புத்ரபௌவத்ரோசிதாம் கிரியாம்
பீஷ்மாய நமக = இதமர்க்யம் = 1 தடவை

வசூனா மவதாராய சந்தனோ ராத்மஜாய ச
அர்க்யம் ததாமி பீஷ்மாய ,ஆபால பிரம்மசாரினே
பீஷ்மாய நமக இதமர்க்யம் = 1 தடவை

அனைவரும் பயன் அடையவேன்டியே இந்த பதிவு.
இஷ்டமில்லாதவர்கள், தேவை இல்லாமல் கமெண்ட் செய்யவேண்டாம்