புதிய ஆடைகள் அணிய சிறந்த நட்சத்திரங்கள்

சில பொது விஷயங்கள். ஓரளவிற்கு உங்களுக்கு ஒத்துவரும் அன்பர்களே.

புதிய ஆடைகள் அணிய சிறந்த நட்சத்திரங்கள் :

அஸ்வினி,ரோகிணி,புனர்பூசம்,பூசம்,உத்திரம்,அஸ்தம்,சித்திரை,சுவாதி,விசாகம்,அனுஷம்,உத்திராடம்,அவிட்டம்,உத்திரட்டாதி,ரேவதி,

ஆமாங்க மேற்கண்ட 14 நட்சத்திரம் வரும் நாளில் புது ஆடை அணியுங்க கீழ் கண்ட யோக பலனைபெறுங்க…

இதெல்லாம் எப்படி பாக்கறது அப்படின்னு கேட்கறிங்களா ?
ஜோதிடம் தெரிந்தவங்க பஞ்சாங்கம்.
தெரியாதவங்க தினசரி காலாண்டர்ல அன்றைய நட்சத்திரம் பாத்து தெரிஞ்சிக்குங்க.

அஸ்வினி –அரசாங்க கௌரவம்

பரணி — மனைவிக்கு தீமை

கிருத்திகை –உடல் எரிச்சல்

ரோகிணி —-ஸகலார்த்த லாபம்

மிருகசீரிஷம் –ஆடையை எலி கடிக்கும்

திருவாதிரை..—மரணம்

புணர்பூசம் –தனதான்யவிருத்தி

பூசம் —ஸகலார்த்த லாபம்

ஆயில்யம –நோய்

மகம் —-மரணம்

பூரம் – —-நோய் தொல்லை

உத்திரம் –பல ஆடை விருத்தி

அஸ்தம –இனிய பொருள் லாபம்

சித்திரை –வகைவகையான ஆடை லாபம்

சுவாதி –சிறந்த உணவு

விசாகம –மன சந்தோஷம்

அனுஷம –உறவினர் லாபம்

கேட்டை –ஆடை கிழியும்

மூலம –தான்யநாசம்

பூராடம் –நோய்

உத்திராடம் –பல ஆடைகள் கிடைக்கும்.

திருவோணம் –கண் நோய்

அவிட்டம் —தான்யவிருத்தி

சதையம் —விஷ பயம்

பூரட்டாதி —அரசாங்க பயம்

உத்திரட்டாதி –புத்திர சம்பத்து

ரேவதி — உயர்ந்த பொருள் லாபம்

 

இத்தோடு கூட கொஞ்சம் கிழமைக்கான பலனையும் பாத்துகுங்க..

ஞாயிறு –நோய்

திங்கள் –துயரம்

செவ்வாய் –தீயினால் நாசம்

சனி —- பெரும் துயரம்

புதன் —பொருள் லாபம்

வியாழன்.–தனலாபம்

வெள்ளி —அணிகலன் லாபம்