புத்திர பாக்கியம்

பித்ரு தர்ப்பணம் சரியாக செய்பவர்களுக்கே கிடைக்கும்.

சில பேர் நினைக்கலாம், நாம் எதுவும் செய்யவில்லை. ஆனால் புத்திரன் கிடைத்து இருக்கிறான் என நினைக்கலாம்.

ஆனால்,தர்ப்பணம் செய்வானா என தெரியாது. இதுவும் புத்திர தோஷம் ஆகும். ஆகவே, சத்புத்திரன் என்றால் அவன் சாஸ்திரத்தை நம்பி சரியாக குறித்த நேரத்தில் அவன் இதுபோல் செய்வதே புத்திரன் ஆகும்.

இந்த புத்திரன் சோறு சாப்பிடமுடியாமல் உடல் இல்லாமல் மேல் உலகத்தில் அலைந்த போது, இந்த தகப்பன்தான் உங்களுக்கு உடலை கொடுத்து, சாப்பிட வைத்தான். பிறகு தாயார் பத்து மாதம் சுமந்தாள். ஆகிய இரண்டு காரணத்துக்காகத்தான் அவர்களுக்கு நாம் தர்ப்பணம் செய்கிறோம் என்பதனை மறக்கவேண்டாம் .சொத்துக்கும் தெவசத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை

அப்பா சொத்து வைக்க வேண்டியதில்லை .அவர் நம்மை சரியான ஆளாக ஆகியதே போதும். நீங்கள் அவருக்கு செய்வது தர்ப்பணம் மட்டும்தான். அதற்க்கு நீங்கள் சம்பாதித்த காசில்தான் செய்வது நன்றிக்கடன் ஆகும். அவரே சொத்து கொடுத்தால் என்ன, நீங்கள் தினமும் செய்யபோகிரீர்களா. இல்லையே. மாதத்துக்கு ஒருதடவை செய்வதற்கும் சொத்துக்கும் சம்பந்தம் இல்லை.

இதை எதனால் சொல்கிறேன் என்றால், ஒரு அன்பர், எங்க அப்பா எனக்கு சொத்து வைக்கவில்லை. நான் ஏன் செய்யனும் என்று கேட்டார். அவருக்காக இந்த பதில்

நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு இப்ப உள்ள காலத்தில் சொத்து வாங்கி தர முடியுமா. நினைத்து பாருங்கள். அந்த அந்த கால கட்டத்தில் விலைவாசியை அனுசரித்து வளர்த்ததே பெரும் சிரமம் ஆகும் என்பதனை உணரவேண்டும்.

அப்பாவுக்கு செய்வதை, தயவுசெய்து யார் சொன்னாலும் அதை கேட்காதீர்கள். ஏன் என்றால், சொல்பவர்கள் எல்லாரும் உங்களுக்கு உதவ முடியாது என்பதனை மறவாதீர்கள்.

நீங்கள் ஊசி போட்டுக்கொள்ளவேண்டும் என்றால், சொன்னவர் வந்து ஊசியை வாங்கி கொள்வாரா என சிந்தித்து செயல்படவேண்டும் அன்பர்களே.

பித்ரு என்றால் ,நமது அப்பா என்பது பொது அர்த்தம். இந்திர லோகத்துக்கு அருகில் பித்ரு லோகம் இருக்கிறது.

ஆதியில் பிரும்மாவால் படைக்கப்பட்ட, பித்ரு தேவர் என்பவர் இருப்பது பித்ரு லோகத்தில்தான். இது ஒரு ஸ்வர்க்கம் எனப்படும் .

இந்த லோகத்தில்,.வசு,ருத்ர,ஆதித்ய , என்று சொல்லகூடிய மூன்று தேவர்கள் இருக்கிறார்கள்.

இதில், நம் தந்தையை , வசுவும், தாத்தாவை ருத்திரரும், நமது அப்பாவின் தாத்தாவை, ஆதித்தியர்க்ளும், காப்பாத்துகிரார்கள்.

நீங்கள் கொடுக்கும் எள்ளும் தண்ணீரும்,இந்த தேவர்கள், உங்கள் மூதாதையர்கள் எங்கு இருக்கிறார்களோ, அவர்களுக்கு எந்த உணவு தேவையோ அதை கொடுக்கிறார்கள்.

இப்பவும் சில பேருக்கு சாப்பாடு கிடைக்கவில்லை என்றால் போன ஜன்மத்தில் நமக்கு யாரும் தர்ப்பணம் செய்யவில்லை என்று அர்த்தம். அவர்கள் செய்தால் நமக்கு வரும் இல்லையா. அதுபோல்தான் நீங்கள் செய்தால் உங்கள் பித்ரு வர்க்கம் நலமாக இருக்கும் அன்பர்களே.

அப்படி அவர்களுக்கு ஆகாரம் கிடைக்கவில்லை என்றால்தான் அவர்கள் கோபம் கொண்டு சபிப்பதாக ஐதீகம். பித்து கோபம் நம்மை சிரமப்படுத்தும். அகவே, தர்பனங்களை சரியா செய்யவேண்டும்.

நம் குழந்தைகள் எப்படி , தீபாவளி, பொங்கல் பண்டிகைகள் எப்போது வரும் என்று ஏங்குவார்கள் இல்லையா, எதனால் என்றால், இனிப்பு பாயசம் வடை, துணி எல்லாம் கிடைக்கும் என்பதால், அதுபோல் நமது முன்னோர்ர்கள் தர்பணத்தை ஆசை ஆசையாக எதிர்பார்கிறார்கள். நீங்கள் கொடுக்காதபோது சாபம் வருகிறது .

ஆகவே இதை சரியாக செய்யுங்கள்.

Leave a comment