புஷ்கராம்சம்

ஒருவருடைய ஜாதகத்தில் என்னதான் கிரஹங்கள் பலவீனமாக இருந்தாலும் சில சமயங்களில் அது அவருக்கு வேறு வகையில் கெடுதல் செய்தாலும் பொருளாதாரத்தில் நல்ல நிலைமையிலேயே வைத்திருக்கிறது. இதற்கான காரணங்களை ஆராய்ந்தபோது ஜாதக பாரிஜாதத்தில் ஒரு பாடலில்

வர்கோத்தமே வா யதி புஷ்கராம்சே சாரேந்துதேவேந்தகுரெள ந்ருபால:

கர்மஸ்திதே சோபநத்ருஷ்டியுக்தே ஸம்பூர்னகாத்ரே சசினி் க்ஷிதிச:

முதல் வாக்கியத்தின் பொருளாளனது சந்திரன் வர்கோத்தமம் அல்லது புஷ்கராம்சத்தில் இருந்து, குரு பகவான் செவ்வாயுடம் தொடர்புபெற்றால்…

இப்பாடலில் புஷ்கராம்சம் என்பது வர்கோத்தமத்திற்கு இணையாக கூறியுள்ளது என்னை சிந்திக்கவைத்தது.. ஆனால் ஜாதக பாரிஜாத்தில் புஷ்கராம்சம் என்றால் என்ன என்பதனை எங்கும் விளக்கமாக கூறவில்லை. இது ஒருவேலை ஷட் வர்க்கம், ஸப்த வர்க்கம், தச வர்க்கம், ஷோடச வர்க்கம் போன்றவற்றில் கூறப்படும் வர்க்க ஒற்றமையை குறிக்கும் சொல்ல என்றால் அதுவும் இல்லை. அப்படியெனின் இதனை எங்கு தேடலாம் என்று சில புத்தகங்களை தேடியபோது

நாரதீயம் என்னும் புத்தகத்தில் திங்கள்கிழமை, செவ்வாய்கிழமை அல்லது சனிக்கிழமையில் வரும் அமாவாசையின் இரவு புஷ்கராம்சம் என கூறுகிறது. மேலும் தேடியபோது…

1990ல் ஜூலையில் வெளிவந்த அஸ்ராலாஜிக்கல் மேகசின் என்ற பத்திரிக்கையை சமீபத்தில் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதில் ஜோதிஷ மாமேதையான திரு.சி.எஸ்.படேல் அவர்களின் ஒரு கட்டுரை எனது தேடுதலுக்கு தீனி போட்டது. அதில் புஷ்கராம்சம் பற்றி குறிப்பு தந்துள்ளார்.

மேலும் தேடுதலை தொடர்ந்தபோது நாடிபுத்தகங்களில் புஷ்கராம்சத்தினை பயன்படுத்தி பலன் கூறிய சிலபாடல்கள் கிடைத்தது அவைகளை எல்லாம் உங்களுடன் பகிரவே இந்த பதிவு.

வித்யா மாதவ்வியத்தில்

மேஷஸிம்ஹசாபேஷு ஸப்தமநவமோ

வ்ருஷகந்யாம்ருகேஷு பஞ்சமத்ருதீயாம்

மிதுநதுலாகும்பேஷ்வஷ்டமஷஷ்டெள

கர்கிகீடமீநேஷ்வாத்யாத்ருதீயெள

எதெ புஷ்கரசம்ஜ்ஞா நவாம்சா:

இதன் பொருள்: மேஷம், சிம்மம், தனுசு ராசியில் 7 மற்றும் 9 வது நவாம்ச பாதம் புஷ்கராம்சம்

\ரிஷபம், கன்னி, மகரம் ராசியில் 3 மற்றும் 5 வது நவாம்ச பாதம் புஷ்கராம்சம்

மிதுனம், துலாம், கும்பம் ராசியில் 6 மற்றும் 8 வது நவாம்ச பாதம் புஷ்கராம்சம்

கடகம், விருச்சிகம், மீனம் ராசியில் 1 மற்றும் 3வது நவாம்ச பாதம் புஷ்கராம்சம்

நமது அனைவருக்கும் தெரியும் ஒருராசி என்பது 9 பாதங்களை கொண்டது. இதில் குறிப்பிட்ட பாதங்களில் உள்ள பாதமானது புஷ்கராம்ச பாதம் ஆகும். புஷ்கர என்றால் தாமரை பூ, மத்தளத்தின் தோல், இருபுறம் சுனையுள்ள கத்தி, குட்டை போன்ற பொருள் தரும்.

மற்றொரு பாடலில் முகூர்த்த தர்பனா என்ற நூலில் பின்வரும் பாடலானது

ஏகவிம்சோ மநுஷ்சைவ ஜநாஸ்திரி முநய: க்ரமாத்

மேஷாதிமீநபர்யந்தம் புஷ்கராம்சா: ப்ரகீர்த்திதா:

ஏகவிம்சோ- 21 (விம்சம் என்றால் 20, ஏக விம்சம் என்றால் -21)

மநுஷ்சைவ-14 (14 மனுக்கள்)

ஜநாஸ்திரி- 24 (காயத்ரி-24 அக்ஷரம்)

முநய:-7 (ஸப்த ரிஷிகள்)

இந்த பாகங்கள் அதாவது 21,14,24,7 வது பாகங்கள் தொடர்ந்து மேஷம் முதல் மீனம் வரை புஷ்கராம்ச பாகம் ஆகும். மேஷம் -21, ரிஷபம்-14, மிதுனம்-24, கடகம்-7 இதைபோலவே தொடர்ந்து சிம்மம் 21, கன்னி-14, துலாம்-24, விருச்சிகம்-7, தனுசு-21, மகரம்-14, கும்பம்-24, மீனம்-7. இதனை வேறுவிதமாக கூறுவோமானால்

மேஷம், சிம்மம், தனுசு ராசியில் 7 வது நவாம்ச பாதம் புஷ்கராம்சம்

ரிஷபம், கன்னி, மகரம் ராசியில் 5 வது நவாம்ச பாதம் புஷ்கராம்சம்

மிதுனம், துலாம், கும்பம் ராசியில் 8 வது நவாம்ச பாதம் புஷ்கராம்சம்

கடகம், விருச்சிகம், மீனம் ராசியில் 3வது நவாம்ச பாதம் புஷ்கராம்சம்

முகூர்த்த தர்பனா பாடலுக்கும் முன்னர் கூறிய மாதவ்வியத்தின் பாடலுக்கும் உள்ள ஒற்றுமையை உற்று கவனித்து பாருங்கள். இரண்டுமே ஒரு நவாம்ச பாதத்தினை குறிப்பிட்டு கூறுவது புரியம்.

இதனை வைத்து எவ்வாறு பலன் கூறுவது என பார்த்தோமானால் இதற்கான குறிப்புகள் நாடியில் பல புத்தகங்களில் காணப்படுகிறது. குறிப்பாக சந்திர கலா நாடியில் 20 க்கு மேற்பட்ட பாடல்களில் புஷ்கராம்சத்தினை பயன்படுத்தி பலன் கூறப்பட்டிருக்கிறது. இவை பெரும்பாலும் செல்வ நிலையை அறிவதற்கு பயன்படுத்தபட்டிருக்கிறது. ஆகவே புஷ்கராம்சத்தில் கிரஹங்கள் இருந்தால் அவை செல்வ நிலையில் ஜாதகரை உயர்த்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் உள்ள சூட்சுமம் என்னவெனில் மேஷ, ரிஷப, மிதுன கோணத்திற்கு குரு, சுக்கிரன் வீடுகளும், கடக கோணத்திற்கு சந்திரன் மற்றும் புதன் வீடுகளே புஷ்கராம்சமாக அமையும் என்பதே இதில் உள்ள ரகசியமாகும்.