பூணூல் பற்றிய செய்தி

பூணூல் பற்றிய செய்தி சிலபேர் கேட்டார்கள். அதனால் இந்த பதிவு.

பூணூலை எப்படி தயாரிக்கவேண்டும் என்று ஒரு சட்டமே இருக்கிறது. அதன்படி இதை தயாரித்து இருந்தால், நமக்கு நல்ல பலனே ஆகும்.

இதை இன்று சிலபேர் ஆணியில் மாட்டிவைத்து இருக்கிறார்கள்.தேவைப்படும்போது எடுத்துக்கொள்வது. இது எப்படி இருக்கிறது என்றால், நமது இதயத்தை கழட்டி தனியாக வைத்துவிட்டு, தேவைப்படும்போது எடுத்துக்கொண்டால் எப்படியோ அப்படியே ஆகும்/

இந்த பூணலில் மூன்று இழை இருக்கும். சந்திக்கும் இடத்தில் முடிச்சு இருக்கும்.இப்படி மூன்று இழையிலுமே மூன்று முடிச்சு இருக்கும். = இதற்க்கு ஒரு இழை என்று பெயர். இதை பிரும்மசாரி அணியவேண்டும்.

பிறகு திருமணம் ஆகிற அன்று, இதைபோல் அடுத்து ஒன்று சேர்த்து, அணியவேண்டும். அதாவது இப்போது ஆறு இழை – இரண்டு ஆகும்.

அடுத்து உங்களுக்கு குழந்தை பிறந்தவுடன் , ஒன்று சேரும்.அதாவது 9 இழை = மூன்று பூணல். இந்த மூன்றாவது பூனளுக்கு உத்தரியம் என்று பெயர்.

அதாவது, யாருக்காவது பூணல் அறுந்துவிட்டால், அவர் வீடு சென்று புதிதாக அணிவிக்கும்வரை, இந்த உத்தரியத்தை கொடுத்துவிடலாம். மறுபடி நாம் திரும்ப ஒன்றை அணிந்துகொள்ளவேண்டும். அவர் வீட்டுக்கு சென்று மந்திரம் சொல்லி வேறு அணிந்துகொள்வார்.

அப்பா செத்துபோனால், அமாவாசை தர்ப்பணம் செய்தால், மூன்று என்று தவறு தவறாக சொல்லிகொடுத்து,இவர்கள் கெட்டதோடு இல்லாமல் அடுத்தவரையும் தவறான பாதைக்கு அழைக்கிறார்கள்.

நமக்கும் அர்த்தம் தெரியாததால், மூன்று என்றாலே, அப்படியே பேய் பயம் பிடித்துக்கொள்கிறது.

இறந்துபோனவருக்காக அணிவது என்கிற பழக்கமே இல்லை.

ஆகவே திருமணம் வரை = ஒன்று
திருமணத்தன்று = இரண்டு
குழந்தை பிறந்தவுடன் = மூன்று

இப்போது புரிகிறதா.

இந்த மூன்றாவதைத்தான், உத்தரியம் என்று சொல்லுகிறோம். அதாவது, வேட்டி கட்டிக்கொண்டால் நாம் என்ன செய்கிறோம்.மேலே ஒரு துண்டு போட்டுக்கொள்வோம் அல்லவா. அந்த துண்டுதான் உத்தரியம் எனப்படும்.

அதுபோல் பாதுகாப்புக்காக, ஒருவருக்கு தற்செயலாக அறுந்துவிட்டால், அடுத்தவர் அவருக்கு கொடுப்பதர்க்காக அணிவது ஆகும் திரும்ப சொல்கிறேன் .திதி தேவசம், அமாவசை தர்ப்பணம்,அப்பா இறந்தவர்கள் என்று இந்த பூனளுக்கு தனி விதி இல்லை.