பெண் என்ற மாயை

இல்லறம் பெண்ணாலே நல்லறம். உலகில் உயர்வானது இல்லற தர்மமே. இருவரும் சேர்ந்து இன்பமாக இருப்பது தான் இல்லறம். அது தான் தர்மம் ! குடும்பத்துடன் கூடி வாழ்ந்தால் தான் இன்பம் ! துறவறம் தூய்மையற்றது ! அதற்கு அன்பு, பாசம் தெரியாது ! என் அப்பா (கடவுள்) பெண்ணை உன் நிம்மதிக்காகவும், உன்னை உணர்ந்து, நீ யார் என்று தெரிந்து கொள்வதற்காகவும் பூமியில் படைத்தார்..! பெண்கள் ஞானத்தை தூவும் அன்பு மலர்கள் ! ஒரு ஆணுக்கு பெண்ணிடமிருந்தே ஞானம் தோன்றுகிறது ! பெண்களை மதிப்பவன் பெரும் வாழ்வு அடைவான்.. பெண் இல்லாத வாழ்வில் வெற்றி இல்லை ! மகிழ்ச்சி இல்லை ! மலர்ச்சியும் இல்லை ! மலர்களும், பெண்களும் ஒன்றே ! பூஜைக்கு உதவும் பூக்களைப் போல உன் வாழ்வை உருவாக்கும் வாச மலர்கள் பெண்கள் ! அவள் இல்லையென்றால் உன் வாழ்வு வாசமில்லை ! பெண் என்பவள் மாயை ! பெண் இல்லாத ஆண் நிர்மூலம் ! பெண்கள் அழுகின்ற வீடு பெரு வாழ்வு இழக்கும் ! பெரும் நாடும் நிம்மதி இழக்கும் ! பெண்கள் போற்றி புகழப்பட வேண்டிய புண்ணிய ஆத்மாக்கள் ! இந்த புண்ணிய பூமி இந்தியாவை பிரியங்கா ஆட்சி செய்வார். அமெரிக்காவை கிளிண்டன் மகள் செல்சியா ஆட்சி செய்வார். பெண் பெறுமை பேசப்படும் உலகமெல்லாம் ! பெண் ஆட்சியிலே இந்தியா உலகின் முதல் வல்லரசு என்று போற்றிப் புகழப்படும். இது சத்தியமாக நடக்கும் ! நான் நடத்துவேன் ! உலகில் எதெல்லாமோ தேடுகிறாய், ஓடுகிறாய் ! பின் அவளிடமே மீண்டும் சரணடைகிறாய் ! அவளிடமே உன் வளர்ச்சி இருப்பதை மறந்து புரிந்து கொள்ளாமலே மறைந்துவிடுகிறாய் ! பெண்களை தீட்டு என்று ஒதுக்காதே ! கர்பத்தில் அவள் உதிரத்தை சாப்பிட்டு வளர்ந்தாய் ! ஞாபகம் வைத்துக் கொள் ! பெண்களின் மனதை நோகடித்து சாகடிக்காதே! செத்த உடல் பாசத்திற்கு உதவாது. பெண் ஆக்கப் பிறந்தவள் ! பெண்களின் இதயம் அவள் வாயில் இருக்கிறது ! ஆன்மா அவளின் கண்ணில் இருக்கிறது. அதனாலே கருவில் முதலில் கண் உருவாகிறது ! கண்ணிற்கும், ஆன்மாவிற்கும் சம்மந்தம் உண்டு ! அவளை எப்போதும் வாடாமல் பார்த்துக் கொள்..! உன் வாழ்வு எப்போதும் வசந்த காலமாக இருக்கும். இல்லறம் என்பது நல்லது, கெட்டது, இன்ப, துன்பங்களை புரிய வைக்கின்ற களம் ஆகும் ! அந்த களத்தில் யார் ஜெயிப்பார்கள் என்பது முக்கியமில்ல. யார் உணர்ந்தார்கள் என்பதே முக்கியம் ! விட்டு கொடுத்து வாழக் கற்றுக் கொள் ! விட்டு கொடுப்பவர் எக்காலத்திலும் கெட்டுப் போவதில்லை ! பெண்களை போற்று ! இல்லறம் இல்லாத மனித வாழ்வு கல்லறையில் வாழும் வாழ்வுக்கு சமம். ஆதலால் இல்லறத்தோடு இரு! உன் இல்லறம் என்றும் நல்லறமாக இருக்க நான் எப்போதும் ஆசி வழங்குவேன் ! என் அன்பின் ஆசிகள் !

Leave a comment