ப்ரிதியங்கரா தேவி கோவில்

அம்மன் : ப்ரிதியங்கரா தேவி
இடம் : கும்பகோணம் அருகே உள்ள அய்யாவாடி தலம்.

 

சிறப்பு:
இந்த ஆலயத்தில் உள்ள அரச மரத்தில் இலைகள் 5 விதமாக இருகின்றன . அவை போதி, மா, இச்சி, புரசு மற்றும் அரச மரத்து இலைகள். இது மிகவும் அதிசயமான ஒன்று.

 

இதே கோவிலில் மற்றும் ஒரு அதிசயம் .
ஓவ்வொறு அம்மாவாசை அன்றும் “நிகும்பலா” என்ற யாகம் நடை பெறுகிறது . இந்த யாகத்தில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை கூடை கூடையாக அளவில்லா மிளகாய்வற்றலை யாகத்தில் அக்னியில் சேர்கிறார்கள் . இதனால் எந்த விதமான கமரலோ, மூச்சு திணறலோ யாருக்கும் ஏற்படுவதில்லை . இந்த “நிகும்பலா” யாகத்தின் பலன் என்னவென்றால், தீய சக்திகள் நம்மை விட்டு அகலவும், எதிரிகளிடம் இருந்து நம்மை காக்கவும் , சனி பகவானால் வரும் தீய பலனை நீக்கவும், வாழ்வில் முன்னேற்றம் பெறவும், திருமண தடை நீங்கவும் ப்ரிதியங்கரா நமக்கு அருள் புரிவாள்.