மகா சிவராத்திரி

மகா சிவராத்திரி பற்றிய விஷயம்.

இந்த வருடம் பிப்ரோரி பதினேழாம் தேதி செவ்வாய்கிழமை அன்று வருகிறது.

நித்திய பிரதோஷம், வார பிரதோஷம், மாத ப்ரதோஷம், பிரளய ப்ரோதம் என பல வகைகள் உள்ளது அன்பர்களே.

சிவா ராத்திரி அன்று பகலில் ஒரு பொழுது உணவு அருந்திவிட்டு, மாலை ஆறு முதல் அடுத்த நாள் காலை ஆறு வரை, சாப்பிடாமல், சிவன் கோயில் பூஜைகளிலோ அல்லது, உங்கள் வீடு பூஜை ரூமிலோ, இந்த பன்னிரண்டு மணி நேரம் நீங்கள் பூஜை செய்தால் மிகவும் நல்லது.

ஒரு வில்வ இலையையாவது நீங்கள் சிவனுக்கு சமர்பித்துவிடுங்கள். நல்லதாகும். அபிஷேகம் அர்ச்சனை, சகஸ்ரநாம, தேவாரம்,பன்னிரண்டு திருமுறை, சிவ புராணம், ஸ்காந்த புராணம் ,என்று பலவகைகளிலே பாராயணம் செய்யலாம்.

சரி இனி விஷயத்துக்கு வருவோம்.

நீங்கள்,மேல்கண்டமுரைபடி செய்வது சிரமமாக இருக்கும் என்று கருதினால் , இனி இதை நீங்கள் தெரிந்துகொண்டு அதன்படி முயற்சி செய்யவும்.

அதாவது, சிவராத்திரி விரதம் எடுத்துக்கொள்ளுங்கள். வருடத்துக்கு பன்னிரண்டு சிவராத்திரி வரும். ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முன்தினம் சிவராத்திரி ஆகும். இது மாத சிவராத்திரி என பெயர். ஆகவே, நீங்கள் மாத மாதம் இனி வரும் சிவராத்திரிகளில், கோயிலுக்கு சென்று வில்வ அர்ச்சனை செய்துவிட்டால்,மகா சிவராத்திரி அன்று முடியாமல்போனாலும் உங்களுக்கு முழு பலன் கிடைத்துவிடும் அன்பகளே.