மனிதன் விரும்பி அடைய வேண்டியது

மற்ற உயிர்களெல்லாம் ஏதோ ஒரு புலனைத் தான் (உறுப்பு) பயன்படுத்துகின்றன.

ஆனால், மனிதன் ஐம்புலன்கள் மீதும் பற்று வைத்து, அவை சொல்வது போலவே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறான். ஆனால், இந்த புலன்கள் சொல்வதை கடைசி வரை அவனால் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. இவையெல்லாம் ஒருநாள் கெட்டுப்போனால், அவனால் செயல்படவே முடியாது. எனவே, மனிதன் விரும்பி அடைய வேண்டியது இறைவனின் திருவடித் தாமரைகளைத் தான்.

* சம்பாதிக்க விரும்பும் ஒருவன் மென்மேலும் சம்பாதிக்கவே விரும்புவான். எவ்வளவு நாள் வாழ்ந்தாலும் மேலும் வாழவே விரும்புவான். ஆசைகளை அனுபவித்த பின்னும் மேலும் அவற்றையே நாடிச்செல்லவே விரும்புவான். ஆகையால், இவையெல்லாம் ஓய்ந்தபின் பக்தியில் ஈடுபடுவது என்பது நடக்காத காரியம்.

* மனிதசரீரம் நல்லநிலையில் இருக்கும் வேளையிலேயே அதை நன்கு பயன்படுத்தி நற்செயலைச் சாதிக்க எண்ண வேண்டும். இப்படி ஓர் எண்ணம் வந்துவிட்டால், மனித மனம் வேறு எந்த விஷயத்தையும் நாடி அலையாது.

Leave a comment