மரணத்துக்கு பிறகு .நிறைவு பகுதி

அப்படியாக அந்த ஜீவன் இந்த பூ உலகை விட்டு மேல் உலகத்துக்கு புறப்படுகிறது. இது எப்படி பயணிக்கிறது என்று பாருங்கள்.

மொத்தம் 33,33,33,333 பேர் தேவர்கள் ஆவார்கள்.இததான் ,முப்பத்தி முக்கோடி தேவர்கள் என்று நீங்களும் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

எப்படி ஒரு முதலாளிக்கு, பல வேலை ஆட்கள் இருப்பார்களோ, அதுபோல்தான் கடவுளுக்கும், இவர்கள் வேலைக்காரர்கள் ஆவார்கள்.

உத்திராயணம், தக்ஷிணாயனம், என்று இரண்டு அயனங்கள்.

வசந்த ருது, கிரீஷ்ம ருது, வர்ஷ ருது,சரத் ருது,ஹேமந்த ருது , சிசிர ருது என்று ஆறு ருதுக்கள் .

ஆக, சித்திரை,வைகாசி = வசந்த ருது இதுபோல் ஒரு ருதுவுக்கு இரண்டு தமிழ் மாதங்கள். மொத்தம் வருடத்துக்கு பன்னிரண்டு மாதங்கள்.

ஆகவே, ஒரு வருடத்தில், இரண்டு அயனங்கள். ஒரு அயனதுக்கு மூன்று ருதுக்கள் அதாவது ஆறு மாதங்கள்.

ஒரு மாதத்துக்கு, இரண்டு பட்சங்கள். அதாவது வளர்பிறை, தேய்பிறை.

இப்படியாக ஒரு தமிழ் வருடம் முடிந்த உடன் அடுத்த வருடம், அதாவது மொத்தம் அறுபது தமிழ் வருடங்கள். இதுவே தொடர்ந்து rotation முறையில் சுழற்சியில் வருகிறது.

ஆகவே, கெட்டவன், நல்லவன் யாராக இருந்தாலும் அவர்களின் பாவ புண்ணிய கணக்குபடிதான் அந்த ஜீவன் செல்கிறது. யாராலும் இதை மாத்த முடியாது. இங்கு பணம் காசு லஞ்சம் எல்லாம் கிடையாது.

ஏகாதசி மரணம், துவாதசி தகனம் = மோட்சம் , இப்படி ஒரு கருத்து இருக்கிறது. அதெல்லாம் பூமியில் பிறந்த அனைவருக்கும் கிடையாது என்பதனை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.

இப்போது கவனியுங்கள். ஒரு ஜீவன் வளர்பிறையில் இறந்தாலும், தேய்பிறையில் இறந்தாலும் சரி.கவனியுங்கள்.

இரவு இறப்பவர்கள், அன்று தசமி திதி என்று வைத்துக்கொள்ளுங்கள் . இது தேய்பிறை . ஆகவே, இந்த தேய்பிறைக்கு ஒரு தேவர் இருப்பான், அவர்தான் இந்த ஜீவனுக்கு பொறுப்பு,ஆனால் இவரை வளர்பிறையில் உள்ள தேவனிடம் அனுப்பவேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது , பதினைத்து நாள் கழித்து மறுபடியும் அந்த திதி வரும்வரை இவர் வைத்து இருந்து பிறகு அவரிடம் ஒப்படைப்பார்கள்.

பிறகு உத்திராயணம் என்றால் தக்ஷினாயனத்திலும், அல்லது அங்கிருந்து இங்கேயோ, அவரை, அந்த அந்த தேவர்களிடம் கொண்டு விடும்வரை அடுத்தவரின் பாதுகாப்பில் வைத்து இருந்து, அனுப்புகிறார்கள்.

பகலில் இறந்தாலும் இரவில் இறந்தாலும், வளர்பிரையோ அல்லது தேய்பிரையோ எதுவாக இருந்தாலும், உத்திராயனதிலோ தக்ஷினாயனத்திலோ எதுவாக இருந்தாலும், அதன்படிதான் அந்த ஜீவனை செல்வதற்கு அனுமதிப்பார்கள்.

உங்களுக்கு புரியும்படி ஒரு கணக்கு இங்கே காணவும்.

சித்திரை மாத,வளர்பிறை, தேய்பிறை பொறுப்பாளர்கள் .வளர்பிறை அனைத்துக்கும் ஒரு தலைவன். தேய்பிறை அனைத்துக்கும் தலைவன். இந்த இரண்டுக்கும் சேர்த்து ஒரு தலைவன். இது சித்திர மாதத்துக்கு மட்டும். இதுபோல் வைகாசிக்கும். பிறகு இந்த இரண்டு மாதத்துக்கு சேர்த்து அதாவது வசந்த ருதுவிர்க்கு ஒரு தேவர்.

இதைபோல் ஒவ்வொரு ருதுவிர்க்கும். பிறகு மூன்று ருது சேர்ந்த அயனம். இதற்க்கு ஒருவர். அதுபோல் அடுத்த அயனம். இப்போது இந்த இரண்டு அயனதுக்குன் சேர்த்து வருடத்துக்கு ஒருவர். இப்படியாக ஒவ்வொரு தமிழ் வருடத்துக்கும் rotation முறையில் இந்த தேவர்கள் அனைவரும் வேலை செய்கிறார்கள். யாரும் தப்ப முடியாது. உதவிக்கு ஆள் கிடையாது. போன் பேசமுடியாது. தெரிந்தவர்கள் இல்லை. பிறகு என்னதான் செய்வது அன்பர்களே.

அதுதான் தான தர்மம். இதுதான் நம்முடன் வரும்.

ஆகவே, பெரியோர்களை மதித்து அவர்களை மனம் கோணாமல் பார்த்துகொண்டு, பெண்களை கவுரப்படுத்தி, அதுபோல் கணவனை கவுரப்படுத்தி, நம் குழந்தைகளுக்கு இவை எல்லாம் சொல்லிகொடுத்து, வாழ்கையை புரியவையுங்கள் அன்பர்களே.

உங்களுக்கு இந்த பதிவில் ஏதாவது சந்தேகம் இருந்தால் போனில் பேசலாம் அன்பர்களே. நன்றி வணக்கம். இதுவே மிகவும் குறைத்து குறைத்து எழுதியிருக்கிறேன்.

Leave a comment