மரணத்துக்கு பிறகு – பகுதி 1

ஒரு ஜீவன், வயதானவுடன், ஒரு நாள் இறந்துபோகிறது.பொதுவாக உடலில் உயிர் போன பிறகு, சுமார் அரை மணிநேரம் பவர் இருக்கும். ஆனால் அவர்களால் எதுவும் வெளி உலகை புரிந்துகொள்ளமுடியாது.

இப்போது, கண்ணபிரான் ஒரு சில காட்சிகளை காண்பிப்பான். இந்த ஜீவன் அதை பார்த்து ரசித்துக்கொண்டு இருக்கும். இந்த ஜீவன் செய்த புண்ணிய பலனுக்கு ஏற்ப, அது எந்த காட்சியை பார்த்துகொண்டு இருக்கிறதோ, அப்போது, அது நினைவை இழந்துவிடும். பிறகு அது எதை காண்கிறதோ, அதுவாகவே மறுபடியும் பிறப்பு எடுக்கிறது.

இப்படி அந்த ஜீவன் நினைவை இழந்தவுடன்,நாம் இங்கு காரியங்கள் செய்கிறோம். ஆனால், அது தனது சூஷ்ம சரீரத்துடன் பத்து நாட்கள் வரை, இந்த பூமியையே, அதாவது தான் வாழ்ந்த இடம், பழகிய இடம், இவைகளை சுற்றிக்கொண்டே இருக்கும். ஒரு ராக்கெட் எப்படி முதலில் சுழன்று பிறகுதான் மேலே செல்கிறது.அதுபோல்தான் இந்த ஜீவனும். அதனால்தான் பத்தாம் நாள், அந்த ஜீவனுக்கு பிடித்த பலகாரத்தை நாம் படைக்கிறோம். இதற்க்கு தசாஸ்து என்று பெயர்.

பிறகு அந்த ஜீவன் தனது பாதையை நோக்கி செல்கிறது. ஒரு ஜீவன் பாவம் புண்ணியம் இரண்டையும் தனது வாழ்நாளில் செய்திருக்கும் அல்லவா. முதலில் பாவத்தை அனுபவிக்கவேண்டி, தண்ணீரின் வேகம் போல், பாவம் வேகம் அதிகம் என்பதால், அந்த ஜீவனை புத் என்கிற நரகத்தை நோக்கிகொண்டு செல்லும். அப்போது, இந்த ஜீவனின் மகன் கர்மாவை செய்து,புத் என்கிற நரகத்தில் தனது தந்தையை விழாமல் பாதுகாக்கிறான். ஆகையால்தான் சம்ஸ்க்ருதத்தில், இவனுக்கு புத்திரன் என்ற பெயர். எவன் கர்மாவை செய்யவில்லையோ, அவன், அந்த ஜீவனுக்கு புத்திரன் ஆகமாட்டான்.