மரணத்துக்கு பிறகு பகுதி -10

பட்டினத்தார் நிறைய பாடல் நமக்கு தந்துள்ளார். அதில் முக்கியமானது,

ஒருவர் இறந்தால், இறுதி ஊர்வலத்தில் நாம் கலந்துகொள்வோம் அல்லவா அன்பர்களே.அப்போது பறக்கொட்டு கொட்டிக்கொண்டு இருப்பார்கள்.அதாவது அவர்கள் ஒரு பாட்டு பாடி நடு நடுவிலே கொட்டு ,கொட்டுவார்கள்.

நாமும் அதை கவனிக்காமல், நாம், நம்முடன் வந்த நண்பர்களிடம் பேசிக்கொண்டே கடைசிவரை சென்று, பிறகு குளித்துவிட்டு வந்துவிடுவோம். இதுதான் இன்று யதார்த்தமாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது அன்பர்களே.

அந்த பாட்டை நாம் கொஞ்சம்கூட கவனிப்பதே இல்லை. அதற்காகத்தான் இந்த பதிவு

அதாவது, அவன் ஒரு வரி படுவான்.பிறகு பரக்கொட்டு கொட்டுவான். டைண்டைன்,டைண்டைன்,டைண்டைன் என்று

அதாவது அவன் என்ன சொல்லுகிறான் என்றால், பட்டினத்தார் பாடிய பாடலை பாடுகிறான் அல்லவா.

இதோ முன்னாள் போகிறானே, இவன் பிறந்தது முதல், வாழ்க்கையில் நடந்தது வரை விவரமாக சொல்லி, இறந்தவனுக்கு ஒரு புகழ் கொடுக்கிறான். அப்பெற்பட்டவன் இப்போ போய்விட்டான் , என்று சொல்லி மணி அடிக்கிறான்.

உண்மையிலேயே இந்த பாட்டு இறந்தவனுக்கு இல்லை. கடைசியாக, இது இவனுக்கு சொல்லவில்லை. பின்னால் நடந்துகொண்டு வருகிறீர்களே, உங்களுக்கும் இப்படித்தாண்டா, உங்களுக்கும் இப்படித்தாண்டா,டைண்டைன்,டைண்டைன்,டைண்டைன்,என்று அடிப்பான். நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

இனியாவது எங்கேயாவது செல்ல நேர்ந்தால், அங்கு மௌனம் காத்து, கூட செல்லும் நபருடன் சிரித்து பேசிக்கொண்டு செல்லாமல், கவனிக்க வேண்டும் என்பதர்க்காதத்தான் இந்த பதிவு அன்பர்களே.