மரணத்துக்கு பிறகு பகுதி -11

ஏற்கனவே சொன்னபடி நாம் கடைசி நேரத்தில் எதை நினைக்கிறோமோ அதுவாக பிறக்கிறோம் என்று சொன்னேன் அல்லவா.

அப்போது நாம் எப்போதும் பகவானின் ச்மரனையாகவே இருக்கவேண்டும் என்றால், நான் நமது வாழ்க்கையில் நன்றாக இருக்கும்போதே பகவானை வணங்கிவிடவேண்டும். அதாவது அந்த நேரத்தில் நமக்கு சொல்ல வராது. அதனால்தான் பெரியோர்கள், அப்போதைக்கு இப்போதே சொல்லிவிட்டேன்,அரங்கமாநகருளானே என்றார்கள்.

ஆகவே அன்பர்களே, நீங்கள் இப்போதே தினமும் ஒரு தடவை இந்த மந்திரத்தை சொல்லிவந்தீர்களே ஆனால் உங்களுக்கு கடவுள் வந்துவிடுவார்.

பிரணம்யா ஸக்ருத் பாதயோஸ்தே பதித்வா
பிரசாத்ய பிரபோ பிரார்தயே நேகவாரம்
ந வக்தும் க்ஷமோஹம் ததாநீம் க்ருபாப்தே
ந கார்யாந்தகாலே மனாகப்யுபேக்ஷா

pranamyaa sakruth paadhayosthe pathithvaa
prasaathya prabo praarthaye nekavaaram
na vakthum kshamoham thathaaneem krupaapthe
na kaaryaanthakaale manaakapyupeksha

கருணை நிறைந்த பிரபுவே,மரணத் தருவாயில் நான் உன்னை பிரார்த்திக்க சக்தியற்று இருப்பேன் ஆகையால்
அக்காலத்தில் உன்னை விட்டு விடலாகாது என்று இப்போதே உனது பாதங்களில் பல தடவை விழுந்து நமஸ்காரம் செய்து கேட்டுகொள்கிறேன்