மரணத்துக்கு பிறகு – பகுதி 5

இந்த ஜீவனுக்கு ,மகன் காரியம் செய்கிறான் என்று பார்த்தோம் அல்லவா அன்பர்களே. சரி , இந்த மகன்,எப்படி அந்த ஜீவனின் உடலுக்குள் வந்தது.அதை கொஞ்சம் கேளுங்களேன்.

ஏற்கனவே சொல்லியபடி , மகனாகிய ஜீவன் உடல் இல்லாததால் , சாப்பிடமுடியாமல் இருந்தார் அல்லவா. அப்போது இறந்த ஜீவன்தானே, இந்த மகனுக்கு உடல் கொடுத்தது. பிறகு வாழ்ந்தது. எப்படி உருவானது என்று இப்போ தெரிந்துகொள்ளுங்கள்.

ஆண்டவன் ,மேகக் கூட்டங்களை படைக்கிறான். இந்த மேகங்கள் பல வகைப்படும். இவை இல்லை என்றால் நமக்கு மழை கிடையாது . ஆகவே, இந்த மெகா மேகக்கூட்டங்களை உருவாக்குகிறான். சாதாரண மேகம் முதல் மிகவும் சக்திவாய்ந்த மேகம் என பலவிதமான மேகங்களை கடவுள் உருவாக்குகிறான். இந்த மேகத்தின் தன்மையை பொறுத்துத்தான் நமக்கு மழை அதிகமாகவோ குறைச்சலாகவோ பெய்கிறது .

எதற்கும் ஒரு விதை உண்டு .விதை இல்லாமல் பயிர் இல்லை. இது உங்களுக்கு நன்கு புரியும் என நினைக்கிறேன்.

அதைப்போலவே, விதை என்று சொல்லக்கூடிய ,அந்த உடல் இல்லாத ஜீவன் பசிக்கும்போது,அதற்கு நல்லகாலம் வந்தவுடன், இதை அந்த மேகக்கூட்டங்களில் விட்டுவிடுகிறான்.

இந்த மேகங்கள் நகரும் தன்மை வாய்ந்தவை என உங்களுக்கு தெரியும்தானே. அப்படி, பல மேகங்களை இறைவன் நகரச்செய்யும்போது, ஒவ்வொரு மேகங்களும், ஒவ்வொரு இடத்துக்கு சென்றுவிடுகிறது. அந்த அந்த இடத்தில் மழை பெய்வதற்காக. அதனால்தான், ஒரு இடத்தில் மழை பெய்தவுடன், சில நாள் கழித்து அடுத்த இடத்தில் மழை வருகிறது. ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் மழை பெய்வதில்லை

இப்போது மேகங்கள், இந்தியா, ஐரோப்பா, அமெரிக்க, லண்டன், ஆஸ்திரேலியா,போன்ற கண்டங்களுக்கு நகர்ந்து செல்கின்றன.

உலகில் மூன்றில் ஒரு பகுதியே நிலம் ஆகும். ஆகவே, என்பது விழுக்காடு மழை , சமுத்திரத்திலும், காடுகளிலும், மலைகளிலும் பெய்துவிடுகிறது. மீதி தரையில் பெய்கிறது.

இதிலும், தரையில் பெய்யும்போது, அடுக்கு மாடி கட்டிடங்களில் என்பது விழுக்காடு விழுந்துவிடுகிறது.

3% மட்டுமே ,வயல்களில், பயிர் செய்யும் இடங்களில் விழுகின்றன….தொடரும்.