மரணத்துக்கு பிறகு – பகுதி 7

ரிஷிகளும் முனிவர்களும், சாஸ்திர ஆராய்ச்சி செய்துகொண்டு இருந்தபோது,கடவுளின் அருளினால் சில விஷயங்களை நமக்கு காண்பித்தார்கள்.

அதாவது , இந்த ஜீவன் இறந்தவுடன் உடலை நாம் சரியாக அப்புறப்படுத்துகிறோம் அல்லவா. அதன் பிறகு பதிநைந்துநாள் காரியம் செய்துவிடுகிறோம்.

ஆனால் முதல் வருட முடிவில் இதேபோல் செய்வதே இல்லை. இது மிகவும் தவறு ஆகும்.

சாஸ்திரம் இதை என்ன சொல்கிறது என்று பாப்போம்.

அதாவது சாஸ்திரத்தை ஆராய்ச்சி செய்து சொல்லும்போது, முதலில் இறந்த உடலை தகனம் செய்துவிட்டு, பிறகு காரியங்களை ஒரு வருடம் முடியும் அந்த தேதியில் முறையாக நன்றாக செய்யவேண்டும் என்று தெரிவித்தார்கள்.

இதுதான் உண்மை. ஆனால்.,நமக்காக, அன்றே, சில முனிவர்கள், சில சந்தேகங்களை கேட்க,இதில் நியாயம் இருப்பதால்,சாஸ்திர வல்லுனர்கள் , கீழ்கண்டபடி முடிவு எடுத்து சொன்னார்கள். அதை இப்போது கடைபிடிக்கிறோம் ஆனால் அரைகுறையாக.

அதாவது, முதல் பத்து நாட்கள் செய்யாமல் வருட கடைசியில்தான் செய்யவேண்டும் என்று சொல்லுகிறபோது., இறந்த ஜீவனுக்காக செய்யும் மகன்,உயிரோடு இருக்கவேண்டும் அல்லவா. அப்போதுதானே, முதல் வருடம் செய்யமுடியும்.

ஒரு வேலை இந்த மகனுக்கு ஆயுசு குறைவாக இருந்து, முதல் வருடத்திற்குள் இவன் போய்விட்டால், அப்போது அந்த ஜீவனுக்கு எதுவுமே கிடைக்காதே என்றார்கள்.

சரி அப்போது, இந்த மகன் முதல் பத்து நாட்களுக்கு எல்லாத்தையும் செய்துவிடட்டும். இவன் கண்டிப்பாக ஜீவனுடந்தான் இருப்பான். அப்போது இவன் இருக்கிறபடியால் முதல் வருட முடிவில் நன்றாக செய்துவிடவேண்டும் என்றார்கள்.

ஆகவே, அன்பர்களே, முதல் பதினைத்துனால் நாம் எவ்வாறு செய்கிறோமோ அதேபோலவே, வருட முடிவிலும் நாம் அதபோல் நான்கு நாட்கள் முறையாக செய்துவிடவேண்டும் அன்பர்களே. புரிகிறதா ?