மரணத்துக்கு பிறகு – பகுதி 4

இப்படியாக அந்த ஜீவன் ஒரு வருட காலம் ஆகிறது அங்கு செல்ல.

அதே நேரத்தில், இந்த ஜீவன்,வேறு ஒரு உடலை reserve செய்துகொண்டுதான் இந்த உடலை விடுகிறது. அப்படி புதுமண தம்பதிகளின் இடத்தை பிடித்துக்கொள்கிறது.

இப்போது, இந்த ஜீவனுக்கு, மகன் ஒரு வருடம் பூராவும் காரியம் செய்கிறான் அல்லவா. அதே நேரத்தில்தான், இந்த ஜீவன் வேறு ஒரு இடத்தில் தாயின் கற்பத்தில் வளர்ச்சி ஆகிறது.

எந்த மகன் சரியாக செய்யவில்லையோ, அப்போது அந்த ஜீவன் வேறு ஒரு இடத்தில் சரியாக வளர முடிவதில்லை.

அதனால்தான், கர்மாக்களை சரியாக செய்தால்தான், பித்ரு ஆசீர்வாதம் நமக்கும கிடைத்து,பித்ருவிர்க்கும் நல்ல குடும்பத்தில் பிறவி, படிப்பு, வேலை திருமணம் என்று வரிசையாக நல்லது நடக்கிறது அன்பர்களே.

இதுபோல் நமது முன்ஜென்ம மகன் சரியாக செய்யாததால்தான், நாம் இங்கு இப்போ கஷ்டப்படுகிறோம். இதை சரி செய்துவிட்டால், நமக்கும் நல்லது நமது மூதாதையருக்கும் நல்லது ஆகும்.

ஒரு உதாரணம். பொதுவாக ஒரு ஊர் இருக்கிறது. அதில் பல குடும்பங்கள். இல்லையா அன்பர்களே. அதுபோல்தான், இறந்த அனைவரும் ஒன்று கூடும் இடம், பித்ரு லோகம் எனப்படும். இதில் அனைவரும் பொதுவாகும்.

பொதுவாக, பித்ரு ஆசீர்வாதம் என்பது மிகவும் ஈசியானது. நமக்கு புரிவதில்லை அதுதான் காரணம்.

நாம் ஒரு வருடத்தில் எத்தனை திருமணங்களுக்கு சென்று வருகிறோம். ஆனால் நாம் என்ன செய்கிறோம், சரியாக முஹூர்தநேரத்துக்கு சென்று, டிபன் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுகிறோம் அல்லவா. இது மாபெரும் தவறு ஆகும்.

எப்போதுமே, திருமணத்துக்கு சென்றால், முஹூர்த்த சாப்பாடு சாபிடவேண்டும். அப்படி நீங்கள் சாபிட்டால்தான், பித்ரூ ஆசீர்வாதம் உங்களுக்கு கிடக்கும். அனைத்து இடத்திலும் சாப்பிடும்போது, ஏதோ ஒரு இடத்தில், நமது பித்ரு வந்து ஆசிர்வதிப்பார். இங்குதான், அந்த தம்பதியருக்கு புத்திர பாக்கியம் கிடைக்க ஆரம்ப்பம் ஆகும் நேரம் ஆகும் அன்பர்களே…தொடரும்