மரணத்துக்கு பிறகு – பகுதி 9

பொதுவாக நீங்கள் சொல்லக்கேட்டிருப்பீர்கள்.

மனிதனுக்கு மொத்தம் ஏழு பிறவி என்று.

இது மிகவும் தவறு ஆகும்.

ஒரு அறிவு, இரு அறிவு, மூன்று அறிவு, நான்கு அறிவு, ஐந்து அறிவு, ஆறு அறிவு, அடுத்த நிலைதான் மோட்சம்.

அதாவது, ஊர்வன,நீந்துவன , பறப்பன, ஒத்தைக்கால், இரட்டைக்கால், மூன்று கால், நான்குகால், எட்டுகால் என, பல ஜீவராசிகள், இந்த பூமியில் தினமும் பிறக்கின்றன.இறக்கின்றன.

மொத்த ஜீவராசிகள், கடவுளால் படைக்கப்பட்டுள்ளது =என்பத்தி எட்டு லக்ஷம் ஆகும். இதில் ஒரு ஜீவன்தான் மனிதன் எனப்படுகிறான்.

ஆகவே, அறிவின் அடிப்படையில் அவன் பரிணாம வளர்ச்சியால், ஆறாவது அறிவு என்கிற மனித நிலையை அடைகிறான்.

இங்கு வந்தவுடன் அவன்,தனது சுயநலத்தால், மற்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் சிரமத்தை கொடுக்கிறான். பாவம் செய்கிறான். அதனால், மோட்சம் கிடைக்காமல், மறுபடியும் ஆரம்பத்தில் இருந்து பிறந்து பிறந்து, இந்த பூமியிலேயே வாழ்ந்து கொண்டு இருக்கிறான்.

ஆகவே, மனிதப்பிறவி கடைசி பிறவி கிடையாது. செய்த பாவத்தை,செய்த புண்ணியத்தை, இரண்டையும் நாம்தான் அனுபவிக்கவேண்டும் என்பதால்,இரண்டையும் மீதம் வைக்காமல் எப்போது நாம் இருக்கிறோமோ அப்போதுதான் மோட்சம் சித்திக்கும் .இதில் எது ஒன்று நமக்கு கைவசம் இருந்தாலும் அதை அனுபவிக்க, ஜன்மா உண்டு என்பதனை மறக்கவேண்டாம் அன்பர்களே.

இதில் ஒரு ஆச்சரியமும் இருக்கிறது.அதாவது ,ஒவ்வொரு ஜீவ ராசிக்கும் அதன் அதன் அறிவுதான் இருக்கும். ஆகையால், அந்த ஜீவ நிலையில் அதற்க்கு மேலே அதனால் சிந்திக்கவோ செயல்படவோ முடியாத நிலை உள்ளது.

ஆனால், மனிதனுக்கு மட்டும் சிந்திக்கும் தகுதியை ஆண்டவன் கொடுத்து இருப்பதால், நாம் நல்லதை சிந்திப்பதில்லை.கெட்டதை சிந்திக்கிறோம். அப்போது,
நமது மனதில், காம,குரோதங்கள் நிறைந்து இருப்தால்தான்,நமக்குள்ளே மிருக குணங்கள் வந்துவிடுகிறது.

ஆகவே அனைத்து குணங்களும் உள்அடக்கியே மனிதன் வருகிறான்.

ஏனேன்றால்,சிந்திக்கும் திறன் இவனிடம் இல்லை.அதாவது ,மனித ரூபத்தில் வந்து, மிருக ரூபத்தில் உள்ள குணத்துடன் இருக்கிறபடியால் .

இங்கே ஒன்றை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்தவேண்டும்.

போன பதிவில் ,மழைத்துளியில் கலந்து பயிர்களில் கலக்கின்றன என்று சொன்னதை இங்கு ஞாபகப்படுத்திக்கொள்ளவும்

அனைத்து ஜீவ ராசிகளுக்கும் ஒரே விதைதான் அன்பர்களே. ஆச்சர்யமாக இருக்கிறது இல்லையா அன்பர்களே.

பூமியிலே தனித்தனி விதை இருக்கின்றன.இது உங்களுக்கே தெரியும்./ மாங்காய் என்றால் மாமரம் தான் வரும். தேங்காய் என்றால், தென்னை தான் வரும். அல்லவா. ஆனால், மேல் உலகத்திலிருந்து அப்படி இல்லை.

அதாவது அந்த பயிர்களை எது எது சாப்பிடுகிறதோ சாப்பிடும் உடலிலே கர்ப்பம் வளர்கிறது. அகவே, அரிது அரிது மானுடனாய் பிறப்பது அரிது என்று பெரியோர்கள் சொன்னார்கள் / அதிலும் கூன் குருடு இல்லாமல் பிறப்பது அரிது.

அப்படியாக, அந்த விதை மேல் இருந்து கீழே விழுகிறது அல்லவா, அதில் சில விதைகள்,வந்து நேராக விழாமல் எதிலேயாவது முட்டி மோதி கடைசியில் வந்து விழுகிறது அல்லவா. அப்போ அது சேதமடைந்து வருகிறதுதானே. அந்த சேதம் அடைத்து விழுந்த பகுதியை ஒருவன் சாபிடும்போதுதான்., அந்த குழந்தை ஊனமாகப்பிறக்கிறது .

அப்பாடா.இப்போ கடவுள் நமக்கு ஆரம்பத்தில் இருந்தே கூட இருந்து, நம்மை நல்வழிப்படுத்தி,நல்ல குடும்பத்தில் பிறக்க வைத்தானே,அவனுக்கு நம்மால் என்ன கைம்மாறு செய்யமுடியும்.

தலை வணங்குவதைவிட.