மரணத்துக்கு பிறகு – பகுதி 6

இவ்வாறு அந்த மேக கூட்டங்கள் செல்லும்போது மழை பெய்கிறது. அந்த மாதிரி பெய்யும்போது, அந்த மழைத்துளிகளின் வழியாக கடவுளால் அனுப்பப்பட்ட விதைகள் பூமியில் விழுகிறது.

வயல்களில்,விழும்போது, அங்கே, நெல்,சோளம், கேள்விறகு ,கரும்பு , காய்கறிகள் போன்றவைகளில் அந்த நீருடன் கூடிய, கடவுள் அனுப்பிய விதை வந்து விழுகிறது. இது கண்ணுக்கு தெரியாது. எந்த சாமான்களுடன் , இது கலந்து இருக்கிறது என்று யாருக்குமே தெரியாது.

பிறகு அறுவடை ஆனவுடன் அவைகள் பல மூட்டைகளாக, பிரிக்கப்பட்டு, அவைகள் வெவ்வேறு ஊர்களுக்கும் நாடுகளுக்குமனுப்பப்படுகிறது.

பிறகு அங்கிருந்து , சிறிய சிறிய ஊர்கள்.,கடைகள் போன்றவைகளுக்கு செல்கிறது. அதில் சில பொருட்கள், தள்ளு வண்டியில் வீடு வீடாக வந்து விற்கிறார்கள், அவர்களின் சாமான்களை.

இப்படியாக, நாம் வாங்கும்போது ,அந்த விதை உள்ள பொருட்கள் நமக்கு கிடைக்கவேண்டும்.தெரியாது. அது சாப்பாட்டில் மூலமாக , அந்த ஆண் மகனுக்கு வருகிறது.

பிறகு அந்த மனைவி கர்பமடைந்து , பத்து மாதம் கழித்து, குழந்தை பிறக்கிறது .

இத்தனையும்,sattelite மூலம் , நமக்கு டிவி ,டெலிபோன் எப்படி வேகமாக செயல்படுகிறதோ , அதுபோல் கடவுளின் sattelite படு வேகமாக, இத்தனையும் செய்கிறது.

இதைத்தான் ,முனிவர்கள் தனது ஞான திருஷ்டியால் தெரிந்துகொண்டு, ஜாதகம் என சொல்லி இருக்கிறார்கள்..தொடரும்.