மரணத்துக்கு பிறகு – பகுதி 8

கர்பிணி பெண்கள் கவனத்துக்கு:

நாம் இங்கே, அதாவது மகன், செய்கிற காரியத்தால், அந்த ஜீவன் அதாவது அவனது அப்பா, நல்லகதி அடைகிறதை பாப்போம்.

இதுவே பிதுரு கடமை ஆகும். அவன் சரியாக செய்யவில்லை என்றால், இவனுக்கும் அதுதானே கதி ஆகும்.

ஆக, இங்கு முறையாக, மாதாமாதம் இவன் காரியங்கள் செய்யும்போது,அங்கே என்ன நடக்கிறது என்று பாருங்கள்.

இறந்த ஜீவன் வேறு ஒரு உடலை எடுத்துக்கொண்டுதான் மறைகிறது. மோட்சம் அடைந்தால் பிறவி இல்லைதான்.அது நமக்கு தெரியாதே/

அப்படி பிறவி உண்டு என்கிறபோது , அந்த ஜீவன் அடுத்த பிறப்புக்கு தயார் ஆகிறது

வேறு ஒரு உடலில், அதாவது, திருமணம் ஆன தம்பதியரில் யாரோ ஒருவருக்கு மருத்துவர் ,conceive உறுதி செய்கிறாரே. அதுதான்.

முதல் பத்து நாளில் செய்கிற காரியத்தால், அந்த ஜீவன் வேறு ஒரு உடலில் போகிறது அல்லவா. அப்போது கரு உண்டாகி கலங்குகிறது.

ஒரு வாரத்தில் அது நீர்க்குமிழிபோல் ஆகிறது

பதினைந்து நாளில் பிண்டம் போல் ஒரு கெட்டி உருண்டை ஆகிறது

ஒரு மாதத்தில் கடினமாக ஆகிவிடும்.

இரண்டாவது மாதத்தில் தலை தோன்றுகிறது

மூன்றாவது மாதத்தில் பாத பகுதிகள் தோன்றுகிறது

நான்காவது = மாதம் = மணிக்கட்டு,வயறு,இடுப்பு

ஐந்து மாதம் = spinal cord=முதுகெலும்பு

ஆறு = வாய், கண்,மூக்கு காது

எழு = ஜீவனுடன் ஐக்கியம் ஆகிறது

எட்டு = பூர்த்தி லக்ஷணங்கள்

ஒன்பது =பரிபூரண நிலை .இப்போதுதான் இந்த ஜீவனுக்கு முன்ஜென்மம் ஞாபகத்துக்கு வந்துவிடும்.

புண்ணிய பாவத்தை நினைத்து பார்த்தல் நடக்கும்.

பிறகு விஷ்நு மாயையால் அது மறைந்துவிடும். அதாவது குழந்தை பிரயாசைப்பட்டு, தாயில் வயிற்றிலிருந்து வெளியே வர ஆரம்பிக்கிறது இல்லையா அன்பர்களே, அதே நேரத்தில் மகாவிஷ்ணு ஒரு காற்றை கொடுத்து ,அந்த குழந்தையை பிறக்க வைக்கிறார். அதுதான் வேகம் என்பது. அந்த நேரத்தில்தான், இந்த ஜீவனுக்கு வெளியில் வரும் அவசரத்தில், விஷ்ணுவின் காற்றினால், அதான் aneshtheesiyaa என்று சொல்லுகிறோமே அதுபோல், இவனது முன் பிறவி மறந்துவிடும் அன்பர்களே.

பகவான் நமக்கு கொடுக்கும் காற்றுக்கு பெயர்தான் aneshtheesiya.அதனால்தான் முதலில் நமக்கு ஞாபகம் இருந்த எல்லாத்தையும் மறந்து, பூமியில் வந்து விழுகிறோம்.

அதனால்தான் அன்பர்களே, நமது தந்தை, நல்ல இடத்தில் நல்ல வசதிகளுடன் வியாதி இல்லாமல், சகல சொவ்பாகியத்துடனும் பிறக்கவேண்டும் என்பதற்காகத்தான், இறந்ததில் இருந்து ஒரு வருட காலம் அவரையே நினைத்து பூஜைகள் செய்யவேண்டும். கோயில் போகக்கூடாது என்று சொன்னார்கள்.

இப்படி நமக்கும் முன் ஜன்மத்தில் செய்திருந்தால், நாம் யோகவானாக இருந்திருப்போம் என்று இப்போது புரிகிறதா அன்பர்களே.

இப்போ இந்த குழந்தையை பெற்று எடுக்கிறாளே , இவள், ஒரு வருடம் கடவுளின் நினைப்பாகவே இருந்தால் நல்லது. அதுதான் அந்த குழந்தைக்கும் வரும். இவள் சினிமா ட்ராமா, டிவி போன்றவைகளில் இருந்தால் அந்த குழந்தையும் பள்ளிக்கூடம் போகாமல் சொன்னதை கேட்காமல் அடம் பிடிக்கும் அன்பர்களே.

ஆகவே, கர்பிணி பெண் ,ஒருவருடம் தெய்வ சிந்தனையில் இருக்கவேண்டும். கணவனை மதிக்கவேண்டும். நல்ல குழந்தை வேண்டும் என்கிற நல்ல எண்ணம் இருக்கவேண்டும்

இவள் மனம் கலங்கினால், அதாவது தைரியகுரைவாக இருந்தால், பிறக்கிற குழந்தையும் மனக்கலக்கம் உடைய குழந்தையாகத்தான் வரும். இதுவே ஊனக் குழந்தைகள் வர காரணமாகிறது

இவளுக்கு ஆரம்ப காலத்தில் வாயு பீடை வந்துவிட்டால, அதுதான் பிற்காலத்தில் twins என்று பிறந்துவிடுகிறது

எப்போதும் தர்ம சிந்தனையுடன் இருந்து கோயில் குளம் என்று சென்று வரும்போது , குழந்தைக்கும் தாயாருக்கும் திருப்தி வந்துவிடுகிறது

அப்பா +, அம்மா – = இதில் அப்பாவின் பவர் அதிகமானால், ஆண் குழந்தையும், அம்மாவின் – பவர் அதிகமானால் பெண் குழந்தையும்.,

இருவரும் சரிசமமாக இருந்துவிட்டால், அலியாகவும் பிறக்கிறது அன்பர்களே. தொடரும்