மரணத்துக்கு பிறகு – பகுதி 3

தொடர்ச்சி.பகுதி 3.

இப்படியாக அந்த ஜீவனுக்கு புத்திரன் செய்கிறான்.ஏன் இப்படி செய்யவேண்டும்.,என்று சிலர் நினைக்ககூடும்.

இந்த புத்திரன் பிறப்பதற்கு முன்பு,சூஷ்ம உடலில் இந்த உலகை சுற்றி வருகிறான். சோறு, தண்ணி, தாகம் ,இவைகளால் மிகவும் துக்கப்படுகிறான். அலைந்து திரிந்தாலும் இவனுக்கு மருந்துக்குகூட கிடைக்கவில்லை இவைகளெல்லாம்.

எதனால் என்றால்,சூஷ்ம உடம்பினால் ,சாப்பிடமுடியாது.உடல் இருந்தால்தான் சாப்பிடமுடியும். இவனுக்கு உடல் இல்லாமல் இருப்பதால், சூஷ்ம சரீதத்துடன் ஆகாயத்தில் சென்று கொண்டு இருக்கிறான்.

பசி வாட்டுகிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை.
அப்போது, இந்த பூ உலகில் , எங்கெங்கு திருமணம் நடக்கிறது என்று ஆவலாக பார்த்துக்கொண்டு வருகிறான்.

அப்போதுதான் இந்த ஜீவனின் புண்ணிய பாவ வசத்தால், அப்போது திருமணம் ஆன, அல்லது திருமணம் ஆன சில வருடங்கள் காத்திருக்கும் தம்பதிகளுக்கு, இவன் வசப்படுகிறான்.

இதில், அந்த ஆண், கர்ப்பம் அடைகிறான். இரண்டுமாதம் தனது உடலில் வைத்து இருக்கிறான். பிறகுதான் தனது மனைவியிடம் அவனை அறியாமலேயே,கொடுத்துவிடுகிறான். அந்த மனைவி, பத்து மாதம் சுமந்து, மேற்படி சுத்திய ஜீவனுக்கும் உடலுடன் இந்த பூமியில் விடுகிறார்கள்.

ஆகவே, தனக்கு பிறப்பும், உடம்பும் கொடுத்த, அப்பா அம்மாவிற்கு, அவர்கள் இறந்தவுடன், இவன் அந்திம கிரியைகளை செய்யவேண்டிய கட்டாயம் வந்துவிடுகிறது.

இதுதான் காரணம். அப்பா சொத்து வைக்கவேண்டிய அவசியமே இல்லை. இவனுக்கு சரீரம் கொடுத்த காரணத்துக்காக, இவன் அப்பாவிற்கு செய்கிறான்.