மரணத்துக்கு பிறகு – பகுதி 2

தொடர்ச்சி.பகுதி 2.

இப்படி புத்திரன் , பூமியில்,இறந்த ஜீவனுக்கு கைங்கர்யம் செய்யவேண்டும். அதாவது முதல் பத்து நாள் முடிந்து சுபஸ்ரிகாரம் செய்து முடித்து, இருபத்தி ஏழாம் நாள், நாற்பத்தி ஐந்தாம் நாள், ஆறாம் மாதம், ஒன்பதாம் மாதம், வருட முடிவு என இங்கு செய்யவேண்டும்.

மேலும்,முதல் ஒரு வருடத்துக்கு,இறந்த திதியில்,முன் ஒரு நாள், பின் ஒரு நாள் என மாதா மாதம் மூன்று நாட்கள், அந்த ஜீவனுக்காக செய்யவேண்டும்.

ஆகையால்தான் முதல் ஒரு வருடத்துக்கு, எந்த கோயிலுக்கும் செல்லக்கூடாது என வைத்தார்கள். அதாவது, நம்மை வளர்த்து ஆளாக்கிய, அந்த ஜீவனுக்கு நாம் நன்றிகடன் பட்டிருப்பதால், அதையே நினைத்து ஒரு ஆண்டு காலம் விரதம் இருக்கிறபடியால், இங்கு தெய்வம் இரண்டாம்பட்சம்தான் என்று சாஸ்திரம் கூறுகிறது.

நாம் வெளியூர் சென்றால், எப்படி நமக்கு தேவையானதை நாம் எடுத்துக்கொண்டு செல்கிறோம் அல்லவா,அதுபோல்தான் இறந்த ஜீவனும் எடுத்து செல்லவேண்டும். அந்த ஜீவனால் முடியாது என்பதால், இங்கு புத்திரன், அந்த ஜீவனுக்கு தேவையானதை அனைத்தும் இந்த பூமியிலே தானம் செய்யவேண்டும். அப்படி செய்வதால் அந்த பொருள் அந்த ஜீவனுக்கு கிடைக்கிறது. நாம் மணி ஆர்டர் செய்தால்தானே, குறிப்பிட்ட நபருக்கு பணம் கிடைக்கிறது. அதுபோல் மகன் கொடுக்காமல் அந்த ஜீவனுக்கு எதுவும் கிடைக்காது.

இறந்த ஜீவன் மேல் உலகம் போய் சேர ஒரு வருட காலம் ஆகும்., கோடிக்கணக்கான மைல் என்பதால், போகும் வழியில், தாகம், குளிர், வெயில், மழை, பசி, எல்லாம் உண்டே.கரடு முரடான பாதை, ஸ்மூத் பாதை என்று இருக்கிறது.

ஆகவேதான, மகன் இங்கு தானம் செய்யவேண்டும். அப்படி செய்தால்தான் அந்த ஜீவன் இந்த மகனை வாழ்த்தும்.

தானங்கள். வேட்டி,துண்டு, கட்டிக்க, மழையில் நனையாமல் இருக்க, குடை, தடி,உட்கார பலகை,தாகத்துக்கு தண்ணீர் சொம்பு,ஜபத்துக்கு ருத்ராக்ஷ மாலை , உணவுக்கும், நீங்கள் இங்கு அன்ன தானம்,பூஜை செய்ய மணி,தாம்பாளம்,வெயிலில் கால் சுடாமல் இருக்க செருப்பு ,படிக்க புத்தகம், பீடை விலக, தங்கம் வெள்ளி தானம் , இவைகளை இந்த மகன் இங்கு செய்யவேண்டும். அது அந்த ஜீவனுக்கு கிடைக்கிறது.

மேல் உலகம் சென்றவுடன்,இந்த ஜீவனுக்கு, தான் செய்த நல்ல, மற்றும் கெட்ட செயல்களை, அங்கு தெரியப்படுத்துவார்கள்.இப்போது அந்த ஜீவன் பொய் சொல்லாமல் இருந்தால், தண்டனை குறைவு. பொய் சொன்னால், தண்டனை அதிகம்.பொதுவாக, பொய் சொல்ல வாய்ப்பில்லை. எனேன்றால், எப்படி ஒரு aeroplane விபத்துக்கு உள்ளானால், blackbox என்று ஒன்று உள்ளது அதை வைத்து கண்டுபிடிக்கிறார்களோ அதேபோல், இறந்த ஜீவன், மறுபடியும் இந்த உடலைஎடுத்துக்கொண்டு, அங்கே இருக்கும். அப்போது, எறிந்த சரீரம் இருக்கும் அல்லவா, அதன் சூஷ்ம உடல் இருக்கே அதற்க்கு பெயர் blackbox -அதாவது உள்மனசாட்சி அது எப்போதும் பொய் சொல்லாது, நம்மை மாட்டிவிட்டுவிடும். ஆகையால்தான் குழந்தைகளை பொய் சொல்லி பழகக்கூடாது என்று பெரியோர்கள் வளர்த்தார்கள் …தொடரும்

கவனமாக படியுங்கள்.நிதானமாக படியுங்கள். மொத்தம் ஐம்பது பகுதி வரும்.