மேல் நாடுகளுக்கு சென்று வர கிரக நிலைகள் எப்படி இருக்க வேண்டும்?

கடகலக்கினம் அல்லது கடகராசியில் பிறந்தவர்கள் அனேகமாக90% மேல் நாடு சென்று வருகிறார்கள். அல்லது ஜல ராசிக்காரனான குரு லக்கினத்தையாவது அல்லது சந்திரனையாவது அல்லது ஜல ராசிக்காரனானசனியையாவது ஜெனன காலத்தில் பார்த்திருந்தாலும் கடல்கடந்த யாத்திரை அவசியம் உண்டு. அல்லது ஜல ராசிக்காரா்களான குரு,சனி,சந்திரன், முதலி யோர் ஆட்சியோ அன்றேல் உச்சமோ பெற்றிருந்தாலும் மேல்நாட்டுப் பிரயாணம் உண்டு. மகரம் அல்லது கும்ப லக்கினத்தில் ஜாதகர்களும் பெரும்பாலானோர் கடல்கடந்த யாத்திரை செய்து வருகிறார்கள்.