மோட்சம் என்றால் என்ன

ஆண்டவன் தனது பக்தனுக்கு ஏன் கஷ்டம் கொடுக்கிறான். நாத்திகன் நல்லாதானே இருக்கான் .இதுதான் இப்போது அனைவரது கேள்வியும். சரிதானே மக்களே.

இதை சரியாக படிக்கவும். படித்துவிட்டு பிறகு திரும்பவும் உங்களுக்கு வருத்தமாக இருந்தால், உங்களுக்கு இன்னும் பக்தி வரவில்லை என்று அர்த்தம்.

ஒரு குழந்தை பள்ளிக்கு செல்வது பாடம் படிப்பதற்காக ..படிப்பது, வேலைக்கு செல்ல. வேலைக்கு செல்வது திருமணம் செய்துகொள்ள .திருமணம் என்பது வர்கத்தை வளர்க்க.பிறகு திரும்பவும் அந்த குழந்தையை படிக்க வைப்பது. இதுதானே நடந்துகொண்டு இருக்கிறது. எல்லாமே எல்லாருக்கும் கிடைக்குமா என்றால் நிச்சயம் இல்லை. அதுபோல் கிடைக்காமலே போயும் விடாது. இது புரிகிறதா.புரியவில்லையா. புரிந்தால் தொடர்ந்துபடிக்கவும்.

நீங்கள் நல்ல பள்ளியில் சேர்க்கலாம்.பணம் கட்டலாம்.வாத்தியாரை நல்லவராக தேர்ந்து எடுக்கலாம். ஆனால், ஞாபகம் அறிவு என்பது உங்கள் குழந்தைக்கு நீங்கள் கொடுக்கமுடியாது.சொல்லிகொடுக்கலாம். புரிதல் உங்களிடம் இல்லை .அது அந்த குழந்தையின் பூர்வ புண்ணியம் ஆகும்.

மேலே சொன்ன வாழ்க்கைக்கும் படிப்புக்கும் ஒரு துளிகூட சம்பந்தம் இல்லை. மூட்டை தூக்குபவனும் சம்பாதிக்கிறான்.திருமணம் செய்துகொள்கிறான்.குழந்தையை பெற்றுக்கொள்கிறான். இது உண்மையா இல்லையா. பிறகு ஏன் இவ்வளவு சிரமம் கவலை நமக்கு.யோசித்தீர்களா.

ஒருவர் தப்பு செய்கிறார்.தண்டனை தரப்படுகிறது. அப்போது அந்த தண்டனை முடிந்தவுடன், அவன் விடுதலை ஆகிறான். தண்டனை காலத்தில் அவன் திரும்ப தப்பு செய்தால், தண்டனை அதிகமாகும். ஒழுக்கமானவனாக இருந்தால் கால அளவு குறைந்துவிடும். இல்லையா அன்பர்களே.

அதுபோல் , நாம் ஏன் பிறந்தோம் என்று யாரும் சிந்திப்பதே இல்லை.

நாம் பிறந்ததே, போன ஜன்மத்தில் செய்த பாவ புண்ணியத்தை அனுபவிப்பதற்காகத்தான். எப்போது புண்ணியம் உள்ளதோ அப்போது நமக்கு நல்லதும், பாவம் இருக்கும் காலத்தில் சிரமங்களும் வருகின்றன. இதைதான் தசா புக்தி அந்தரம் என்று ஜாதகத்தில் சொல்கிறோம்.

இப்போது நீங்கள் நல்லவர்களாக இருப்பதற்கு, உங்களுக்கு அடுத்த ஜன்மத்தில்தான் பலன் தரப்படும். நீங்கள் இப்போது சிரமப்படுவது, போன ஜென்மத்தின் பாவ பலனே ஆகும்.

இப்போது நமது கணக்கில் பணம் இல்லையென்றால்,மேலாளரை கோபிக்கமுடியுமா.நம் கணக்கில் பணம் இல்லை அதனால் அவன் தரவில்லை. ஆனால், நமக்கு தகுதி இருந்தால் அதை பார்த்துவிட்டு லோன் கொடுக்கிறார்கள் அல்லவா.

அதை அடைக்கவேண்டுமா வேண்டாமா, வட்டியுடன் அடைக்கவேண்டும் அல்லவா. அதுபோல்தான், நாம் சிரமம் அதிகம் படும்போது, கடவுளிடம், லோன் வாங்கி அதாவது புண்ணியத்தை கடனாக வாங்கி, சுகத்தை அடைகிறோம். ஆனால் திரும்ப வட்டியுடன் பணத்தை கொடுப்பதுபோல் கடவு;ளிடம் நாம் வாங்கிய புண்ணியத்தை திரும்ப கொடுக்காமல் இருப்பதால், மறுபடியும் லோன் வாங்கமுடிவதில்லை. ஒரு வேலை கடன் வாங்கியவன் இறந்துவிட்டால், வாரிசுகள்தானே அதை அடைக்கவேண்டும்.அதுபோல் புண்ணியத்தில் லோன் வாங்கி திரும்ப புண்ணியம் செய்யாமல் இறந்துவிட்டால், நமது சந்ததிதானே அதை அடைக்கவேண்டும். அப்படி ஒரு குடும்பத்தில் வந்து நாம் பிறந்தால் மூதாதையரின் கடனை நாம்தானே அடைக்கவேண்டும்.

போன ஜன்மம், இந்த ஜன்மம், அடுத்த ஜன்மம், இது புரிகிறதா இல்லையா அன்பர்களே.

ஆகவே, போன ஜன்மத்தில் செய்த பாவ புண்ணியம் இரண்டையும் இந்த ஜன்மத்தில் அனுபவிக்கிறோம். இப்போது செய்கிற இரண்டையும் அடுத்த ஜன்மத்தில் அனுபவிக்க வேண்டும்.

ஒருவன் லோன் வாங்கி அடைக்கவில்லைஎன்றால் என்ன ஆகும். அதாவது போன ஜன்மத்தில் பாவம் செய்து இப்போது அனுபவிக்கிறோம். உடனே கோயிலுக்கு சென்று, அப்பா, இந்த ஜன்ம புண்ணியத்தில் கொஞ்சம் லோன் கொடுத்து என்னை சுகமாக்கு. நான் திரும்ப இதை அடைத்துவிடுகிறேன் என்று சொல்லி, பிறகு நாம் அதை அடைபதில்லை. அப்போது உங்கள் புண்ணியம் அதாவது இந்த ஜன்மாவில் நீங்கள் செய்த புண்ணியத்தை லோன் என்கிற பெயரில் காலி செய்துவிட்டீர்கள். பிறகு அடுத்த ஜன்மா எடுக்கும்போது, பாவமே அதிகம் இருக்கும் புண்ணியம் இல்லாதால் சிரமம்தானே வரும். அப்படி எடுத்த ஜன்மாதான் இப்போ அனுபவிக்கிறோம்.

சரி. தண்டனையை ஒழுக்கத்தின் பெயரில் குறைப்பதுபோல், ஆண்டவன் என்னசெய்கிறான் பாருங்கள்.

அதாவது, நாம் இந்த உலகில் நம் தண்டனையை அடைந்து பிறகு ரிலீஸ் ஆகவேண்டும். இதற்க்கு பெயர் சாவு./. ஆனால் நாம் பாவமே செய்துகொண்டு இருந்தால், அது அதிகமாகும்.புண்ணியம் செய்தால் அது அதிகமாகும்.

சரி கேள்விக்கு வருவோம். நாத்திகன் சுகவாசி. பக்திமான் சிரமவாசி என்றுதானே நமது எண்ணமே. அதுதான் இல்லை.

நமது வீடு ஆண்டவனுடன் இருக்கும் வீடுதான். பிழைப்புக்காக வந்ததுபோல், நாம் செய்த தவறை திருத்திக்கொள்ள ஜெயில் போல் இந்த பூமியில் இருக்கிறோம். இப்போது நீங்கள் நல்லவர்களாக இருந்தால், அடுத்து உங்களுக்கு இந்த பூமியில் பிறப்பில்லை. கெட்டவர்களாக இருக்கும்போது, திரும்ப பாவம் வருவதால் இவர்களுக்கு அடுத்த ஜன்மா உண்டு.

இதில் என்ன விசேஷம் என்றால், நீங்களே உங்கள் குழந்தைகள் இரண்டு பேரில், சொன்னதை கேட்பவநிடம்தானே நீங்களே அதிகமாக வேலை சொல்கிறீர்கள். முரட்டு பையனிடம் நீங்கள் எந்த வேலையையும் சொல்வதில்லையே ஏன் என்றால், அந்த காரியம் நடக்காது என்பதால். உங்கள் பிள்ளைதான். இருந்தாலும் உங்களுக்கு பிரியம் இருக்காதுதானே.

அதுபோல் கடவுள் நீங்கள் நல்லவராக இருக்கும்போது, உங்களையேதான் அவன் வேலை வாங்குவான். எதனால் என்றால் உங்களுக்கு புண்ணியத்தை கொடுக்கவே அப்படி செய்கிறான். இதனால் என்னபலன் என்றால், உங்களுக்கு மறு பிறவி கிடையாது.

சரி கிடையாது என்றாலும் இப்போது கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா என்று கேட்கலாம். .நீங்கள் இப்போது செய்யும் புண்ணியத்தை, அடுத்த ஜன்மாவில் கொடுக்கவேண்டும். ஆகவே,

கடவுள் கீழ்கண்டபடி சொல்கிறார்.

அதாவது, இந்த பூமியில் ஜனனம் எடுத்து, பாவ புண்ணியத்தை அனுபவித்துவிட்டு, நீ மோட்சம் அடைந்து என்னிடம் வா என்று சொல்லித்தான், அம்மா வயிற்றில் இருந்து நம்மை பூமிக்கு தள்ளுகிறான். இங்கேயே இருப்பதற்கு இல்லை. ஆனால் நாம் திரும்ப பாவம் செய்துகொண்டு திரும்ப பிறந்துகொண்டு இருக்கிறோம்.

இதை தடுக்கவே, நல்லவர்களை அவன் செலக்ட் செய்து, மோட்சம் அளிப்பதற்காக, இவர்களுக்கு சுகத்தை குறைத்து கொடுக்கிறான். இல்லை என்றால் இவன் திரும்பவும பாவம் செய்துவிடுவான் என்பதால் நமக்கு செய்வதில்லை.

வியாசர் பாகவததிலே சரியாக சொல்லி இருக்கிறார். கிருஷ்ணன் யாரை மோட்சத்துக்கு தேர்ந்து எடுக்கிறானோ, அவனுக்கு பணம் காசு கொடுக்கமாட்டான். தேவைக்கு மட்டுமே கொடுப்பான். சொந்த பந்தங்கள் நண்பர்கள் எல்லோரும் எதிரியாகத்தான் இருப்பார்கள். எதனால் என்றால் காப்பாத்திவிட்டால் இவன திரும்ப தப்பு செய்வான். மேலும் கடவுளால் முடியாதா காப்பாத்த. வேண்டுமேன்ற செய்கிறான். ஆகையால், மோட்சம் அடைவதுதான் மனிதனின் குறிக்கோள். மனிதன் அதை விட்டு விட்டு இங்கேயே பணத்துக்கும் பதவிக்கும் சுகத்துக்கும் ஆளாகிறான் என்பதால், செலக்ட் செய்தவர்களை அவன் காப்பாத்தத்தான் என்பதலால் அவர்களுக்கு தேவைக்கு மேல் கொடுப்பதில்லை.

ஆகவே, மோட்சம் அடைபவர்களுக்கு, சொந்த வீடு வாசல், நகைகள் இவைகள் இருக்காது. பன்னிரெண்டில் கேது இருந்தால் மோட்சம் என்று பொய் சொல்லி அனைவரும் இதையே நம்புகிறார்கள். மோட்சம் என்றால் அநாதை என்று அர்த்தம். ஆகவே, கடவுள் வருவதாக இருந்தால், மோட்சதுக்குதான் வருவான். அப்படி இல்லை என்றால் தனது மனைவியை அதாவது லக்ஷ்மியை அனுப்புவான். அப்போது நீங்கள் ஜாலியாக பணம் பணம் பணம் என்றே வாழலாம். இறை தரிசனம் கிடைக்காது.

அதனால்தான் சாதுக்கள், குருமார்கள் எல்லாரும், நாமத்தை சொல்லி சொல்லி நர்த்தனம் ஆடி இறைவனை தரிசித்து மோட்சம் அடைந்தார்கள்.

Leave a comment