யார் பாக்கியசாலி

நாராயண பட்டத்ரி , அவரது நாராயணீயத்தில், யார் பாக்கியசாலி என்று சொல்லுகிறார். இதை பாருங்கள்.

படந்தோ நாமானி பிரமதபர ஸிந்தௌ நிபதிதாகா
ஸ்மரந்தோ ரூபம் தே வரத கதயந்தோ குனகதாகா
சரந்தோ யே பக்தாஸ்வயி கலு ரமந்தே பரமமூ
னஹம் தன்யான்மன்யே ஸமதிகத ஸர்வாபிலஷிதான்

ஹே குருவாயூரப்பா, உன்னுடைய நாமங்களை பாடிக்கொண்டும்,ஆடிக்கொண்டும்,ஆனந்த சாகரத்தில் மூழ்கி தியானம் செய்துகொண்டும், உன்னுடைய குணங்களையும், கதைகளையும், சொல்லிக்கொண்டும், கேட்டுக்கொண்டும், பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும்,சஞ்சரிக்கும் எந்த பக்தர்கள் உன்னிடமே ரமிக்கின்றார்களோ, அந்த பக்தர்களே, பாக்கியவான்கள், அப்படிப்பட்ட அந்த பக்தர்களை , நான், ஸர்வாபீஷ்டங்களையும் அடைந்த பாக்கியசாலிகளாகவே நான் கருதுகின்றேன்.

இதைபோலவே பூந்தானம் என்ற மகா பக்தர் சொல்லுகிறார்.

நீங்கள் இந்த மந்திரத்தை சொன்னால், குருவாயூரப்பன் அனுகிரகம் உண்டு என்கிறார்.

யா த்வரா த்ரௌபதி த்ரானே
யா த்வரா கஜ ரக்ஷனே
மையார்த்தே கருணா மூர்த்தே
ஸா த்வறா க்வ கதா ஹரே

 

Leave a comment