வாஸ்து

இந்த பிரச்சனை சமீப காலமாக தலைவிரித்து ஆடுகிறது.

நீங்கள் எப்படி வீடு கட்டினாலும் வாஸ்து குறை இருந்தே தீரும். முழுவதுமாக , இன்றைய கால கட்டத்தில் போக்க இயலாது.

30 வருடங்களுக்கு முன்பு இந்த வாஸ்து பிரச்சனையை யாருக்குமே தெரியாது . அப்படி நலமாக வாழ்ந்துவந்தார்கள்.

என்ன காரணம்

வாஸ்துவை போக்க ஒரே வழி

உங்கள் வீட்டில் தினமும் சூரிய உதயத்துக்குள் நீங்கள் எழுந்துவிடவேண்டும். வீட்டை பெருக்கி சாநியினால் மெழுகி , வாசல் தெளித்து கோலம் போட்டு ,

சாமி ரூமில் ஊதுபத்தி, சாம்பிராணி இவைகளை காண்பித்துவிட்டு,

தினமும் பூஜை செய்தார்கள். பாராயணம் செய்தார்கள்.

வாஸ்து குறை அன்றும்தான் இருந்தது. ஆனால் அது எடுபடவில்லை.

ஆகவே, அன்பர்களே, இதில் சொன்னபடி நீங்கள் செய்தீர்களேயானால் , உங்கள் வீட்டிலும் வாஸ்து தொல்லை இருக்காது.