வீட்டில்பூஜை

இந்த பூமியில் பிறவி எடுத்த கோடிகணக்கான ஜீவராசிகளில் , மனித இனமும் ஒரு ஜீவன் ஆகும்.எல்லாத்துக்கும் இல்லாத ஒரே ஒரு வித்தியாசம் உள்ள இந்த மனித ஜீவனுக்கு, பேசும் சக்தியையும்,
சிந்திக்கும் சக்தியையும் கொடுத்து இருக்கிறான்.

இந்த மனிதனுக்கு,தேவை மூன்று .உன்ன உணவு,இருக்க இடம்,உடுத்த துணி .இதுபோதும் .ஆனால் அப்படி மனிதன் இல்லாததால் சிரமம் வருகிறது.

ஆகவே, பெரியோர்கள் மனிதனுக்கு புத்தி வேலை செய்ய, மூன்றுவிதமாக இதை பிரித்தார்கள். அவையாவன.

காலை நேர பூஜை உங்கள் வீட்டில்
================================
மகா பாரதம் படித்து பூஜை செய்யவும்.இப்படி செய்வதால், உங்களுக்கு வீடு, வாசல், உணவு,துணிமணிகள் இதற்க்கு குறைவு இருக்காது.

மத்யான வேளை
================
இந்த சொத்து சுகமெல்லாம் நமது வாரிசுக்குதானே.அந்த வாரிசில் சிரமம் வந்துவிடக்கூடாது, என்பதற்காக,, பாரதத்தில் ,ஒருவனுக்கு ஒருத்தி, அல்லது ஒருத்திக்கு ஒருவன், என்று இருக்கவேண்டும். அப்போதுதான் வாரிசில் குழப்பம் வராது.

ஆகவே மதிய வேளையில் நீங்கள் ராமாயண பூஜை செய்யவேண்டும்.

சாயந்திர நேரம்
==============
எப்படி இருந்தாலும் ஒரு நாள் நாம் இறந்தே ஆகவேண்டும். அப்போது இந்த சொத்து சுகம், நமது குழந்தைகள் இவர்கள் நம்முடன் வரப்போவதில்லை என்பதால் ,மேலும்,நாம் இறந்த பிறகு, அடுத்து அடுத்த பிறவிகளில் வெவ்வேறு தாய்க்கும் இதேபோல் பிறந்து சிரமம் வரகூடாது., ஆகையால், நாம் பிறந்ததே எதற்க்காக என்றால், திரும்ப இந்த பூமியில் பிறக்காமல், மோட்சம் அடையவேண்டும் , என்பதால்.,

மாலை வேளையில் ஸ்ரீமத் பாகவதம் பூஜை செய்யவேண்டும்.

இதுதான் வாழ்க்கை முறை ஆகும். இதுதான் பாரத கலாசாரம்.

கரண்ட்ஐ ,சரியாக பயன்படுத்தவில்லை என்றால் எவ்வாறு ஷாக் அடித்து விபத்து ஏற்படுமோ, அதுபோல்தான், இதன் படி வாழாமல், யார் தனது இஷ்டத்துக்கு வாழ்கிறார்களோ,அவர்கள் எல்லாரும் வயதான காலத்தில் கஷ்டப்படவேண்டும் என்கிற விதியினால், இப்போது யார் பேச்சும் கேட்காமல் தான்தோன்றிதனமாக சுத்தி திரிகிறார்கள் என்று அர்த்தம்

Leave a comment