வீட்டில் விளக்கு ஏற்றும்போது இதை சொல்லி செய்யவும். முருகன் கருணை கிடைக்கும் அன்பர்களே.
மேலும் நீங்கள் காவேரி தாயை வணங்கியபலனும் ,வயலூர் முருகனை வேண்டிய பலனும் கிடைக்கும்.
நாத விந்து கலாதீ நமோ நம
வேத மந்த்ர சொரூபா நமோ நம
ஞான பண்டித ஸ்வாமி நமோ நம – வெகுகோடி
நாம சம்பு குமாரா நமோ நம
போக அந்தரி பலா நமோ நம
நாகபந்த மயூரா நமோ நம -பரசூரர்
சேத தண்ட வினோதா நமோ நம
கீத கிண்கிணி பாதா நமோ நம
தீர சம்ப்ரம வீரா நமோ நம -கிரிராஜ
தீப மங்கள ஜோதி நமோ நம
தூய அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம -அருள்தாராய்
ஈதலும் பல கோலால பூஜையும்
ஓத லுங்குண ஆசார நீதியும்
ஈர முங்குரு சீர்பாத சேவையும் -மறவாத
ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை
சோழ மண்டல மீதே மனோகர
ராஜ கம்பீர நாடாளு நாயக -வயலூரா
ஆதாரம் பயிலாரூரர் தோழமை
சேர்த்தல் கொண்டவரோடு முன்னாளினில்
ஆடல் வெம்பரி மீதேரிமாகாயி -லையிலேகி
ஆதி அந்த வுலாவாகபாடிய
சேரர் கொங்குவைக் காவூர் நன்னாடதில்
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் -பெருமாளே.