About

cropped-cropped-tj2.jpgஎனக்கு வயது 59,எனக்கு ஒரே மகன்,எந்த சொத்தும் கிடையாது.

நான் பிறந்தது முதல் 25 வருடம் திருச்சியிலும்,பிறகு 12 வருடம் பெங்களுருவிலும்,11 வருடங்கள், கோபிசெட்டி பாளையம் , ஈரோடு,பெருந்துறை போன்ற இடங்களிலும்,மறுபடியும் 11 ஆண்டுகளாக திருச்சியில் இப்போது இருக்கிறேன்.என் அப்பா அம்மா இருவரும் திருசியில்தான் இருக்கிறார்கள். எனக்கு 2 தம்பியும், நான்கு தங்கைகளும்,. அனைவருக்கும் திருமணம் ஆகி, வெவ்வேறு ஊர்களில் உள்ளார்கள் . நான் வீட்டுக்கு மூத்தவன்.

எனது மனைவி திருச்சி கலெக்டர் ஆபீஸ் அலுவலகத்தில் officer ஆக வேலை பார்க்கிறார்கள். எனது மகன் சென்னையில் உள்ளான்.

எனது தந்தைக்கு வயது 92, தாய்க்கு வயது 79. திருச்சியில் உள்ளார்கள். அப்பாவிற்கு சொந்த ஊர் திருவாரூர் .அம்மாவிற்கு அரியலூர் .எனது அப்பா தனது 7 வயது முதல் சாஸ்திரிகள் .

நான் அவரிடமிருந்து சிறுவயதிலேயே, சில விஷயங்களை கற்றுக்கொண்டேன். நான் college படிப்பு முடித்து private இல் stenographer ஆக 26 வருடம் வேலை செய்தேன். சிறு வயதிலேயே, ஜோதிடம், சாஸ்திரம், தெரிந்துகொண்டு,பெங்களூர் திரு பி வி ராமன் குரூப்பில் ஜோதிடம் பயிற்சி, பிறகு, சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் அவர்களின் மாமனார்,கடலங்குடி நடேச ஐயர் அவர்களின் உரிமத்தில், பயிற்சி, எல்லாத்தையும்விட, கல்கத்தாவில் ,ஆங்கில வழியில் நான்கு ஆண்டு காலம் படித்து, வந்த அனுபவம், ஆராய்ச்சி, வாத பிரதிவாதங்கள், பரிகாரங்கள் என வாழ்க்கை. ஜோதிடத்திலும், பரிஹாரத்திலும் 50 வருட அனுபவம்.

வேதம், உபநிஷதம், 18 புராணங்கள், இவைகளையும் நடுவிலே பயிற்சி எடுத்துக்கொள்ள வாய்ப்பு கிட்டியது.

இந்தியாவில்,20 மாநிலங்கள் சென்று, அந்த ஊர் கலாசாரம்,கோயில்கள் தரிசனம், நதிநீறாடல், போன்றவை கிடைத்தன. 10,000 ஜாதகங்களை அலசி, சில விஷயங்கள் சாஸ்திரத்துக்கு மாறாக இருப்பதால், அதை ஆராய்ச்சி செய்து, பரிகாரதினால் பல குடும்பங்களை சேர்த்துவைத்திருக்கிறேன். புத்திரப் ப்ராப்தி, விவாகங்கள், பிரிந்தவர்கள் இணைதல் வியாதி குணமாதல், போன்றவைகளை கடவுளின் அருளினாலும், குருவின் அருளினாலும், கிடைக்கப்பெற்றது.

எனது என்னம், எப்போதுமே, மனிதனுக்கு, அவரவர்களின் புத்தி, ஒரு குறிப்பிட்ட அளவிற்குமேல் செல்லாது. ஆகவே, சும்மா ஆராய்ச்சி செய்யாமல் ,அப்படியே ஒப்புக்கொண்டு, வாழ்வை சுகமாக வாழ்ந்து, பிறருக்கும் முடிந்தவரை உதவி செய்வதே ஆகும்

என் தினசரி பதிவுகளை நீங்கள் இந்த முகநூல் பக்கத்தில் பார்க்கலாம் :  https://www.facebook.com/tkmoorthiOnline

இந்த தகவலை பகிரவும்