Parihara mantra for all 12 places in the horoscope

அவரவர் ஜாதகத்தில் மொத்தம் 12 கட்டம். இதில் லக்னம் என்பதுதான் முதல் கட்டம். இப்படி மொத்தம் இருப்பது 12 கட்டம். இது அனைவருக்கும் இப்போ தெரியும். 9 கிரகங்களும் எங்கே எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்.கவலை வேண்டாம். நான் இங்கே கொடுக்கிற மந்திரத்தை சொல்லி வந்தால் போதுமானது. அதாவது ஒரு கட்டத்துக்கு ஒரு மந்திரம் வீதம் தனித்தனியாக பதியப்படும். ஆகவே, நீங்கள் மொத்தம் பன்னிரண்டையுமே தினமும் காலை மாலை இரு வேலையும் சொல்லிக்கொண்டே வந்தால், அனைத்தும் நலமாகும் என நம்பப்படுகிறது. நம்பிக்கைதானே வாழ்க்கையாகும்.

லக்னம் . முதல் இடம்.

உயிர், ஜீவன், தோற்றம், அழகு.

இதற்கு நீங்கள் சொல்லவேண்டிய மந்திரம்.

ப்ராயோபவிஷ்டம் கங்காயாம் பரீதம் பரமர்ஷிபிஹி . க்ருஷ்ணே ஸ்வதாமோபகதே தர்மஜ்ஞானாதிபிஹி ஸஹ

Praayobhavishtam gangaayaam pareetham paramarshibihi.krushne swathaamobagadhe dharmajgnaanaathibihi saha.

ஆகவே, இந்த மந்திரத்தை காலை மாலை சொல்லிவந்தால் லக்ன தோஷம் குறையும்.

2ம் இடம்.

வாக்கு, தனம், குடும்பம், கண் பார்வை. நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

நமஸ்தஸ்மை பகவதே வாசுதேவாய வேதஸே,
பபுர் ஜ்ஞானமயம் சௌம்யா யன்முகாம்புருஹாஸவம்

namasthasmai bhagavadhe vaasudhevaaya vedhase,
papur gnaanamayam sowmyaa yanmukaampuruhaasavam

3ம் இடம்

சகோதரம், பேச்சு வல்லமை, கீர்த்தி, தைரியம், இளைய சகோதரம், சகோதரி, காது , ஆள் அடிமை, போகம். நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

ப்ரியவ்ருதோ உத்தானபாதெள திஸ்ர கன்யாஸ்ச பாரத , ஆகூதிர் தேவஹூதிஸ்ச ப்ரஸுதிரிதி ஸத்தம

priyavrutho uththaanapaadhaw thisra kanyaascha bhaaratha, aakoothir dhevahoothischa prasoothirithi saththama

4ம் இடம்

சுகஸ்தானம், தாய், வீடு வாகனம் நிலம். நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

ஜனன்யாபிஹிதஹ பந்தாக ஸ வை நிஸ்ரேயஸஸ்யதே,
பகவான் வாசுதேவஸ்தம் பஜ தத்ப்ரவணாத்மநா

jananyaabihithaha bhandhaaga sa vai nisreyasasyathe,
bhagvaan vaasudhevastham baja thathpravanaathmanaa

5ம் இடம்

சந்ததி, புகழ். நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

அஹம் புரா பரதோ நாம ராஜா விமுக்த த்ருஷ்டஸ்ருதசங்கபந்தக ,
ஆராதனம் பகவத ஈஹமாநோ ம்ருகோபவம் ம்ருக ஸங்காத்த தார்தக

aham puraa bharatho naama raajaa vimuktha thrushta sruthasangabanthaga,
aaraadhanam bhagavadha eehamaano mrukobhavam mruka sangaaththa thaarthaga.

6ம் இடம்

வியாதி, எதிரி, வழக்கு, கடன். நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

தைஸ்தான்யகாநி பூயந்தே தபோதாந ஜபாதிபிஹி ,
நாதர்மஜம் தத்த்ருதயம் ததபீசாங்க்ரி சேவயா

thaisthaanyakaani booyanthe thapodhaana jabaathibihi,
naadharmajam thathruthayam thathabeesaangri sevayaa

7ம் இடம்

களத்திரம், மாரகம், கூட்டாளிகள். நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ ஸ்மரணம் பாதசேவனம் ,
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்யம் ஆத்ம நிவேதனம்

sravanam keerthanam vishno smaranam paadhasevanam
archanam vandhanam dhaasyam sakyam aathmanivedhanam

8ம் இடம்

ஆயுள் ஸ்தானம். நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

நமோ நமஸ்தேகில காரணாய நிஷ்காரணாய அத்புத காரணாய
ஸர்வாகமாம்நாய மஹார்ணவாயா நமோபவர்காய பராயணாய

namo namasthekila kaaranaaya nishkaaranaaya athbutha kaaranaaya,
sarvaagamaamnaaya maharnavaayaa namobhavargaaya paraayanaaya

9ம் இடம்

பாக்கியம், தர்மம், பிரயாணம், கடவுள் பக்தி, குரு உபதேசம். நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

ததோ மனு ஸ்ராத்த தேவக ஸம்ஜ்ஞாயாமாஸ பாரத ,
ஸ்ரத்தாயாம் ஜனயாமாஸ தச புத்ரான் ஸ ஆத்மவான்

thatho manu sraaththa dhevaga samgnaayaamaasa bhaaratha,
sradhdhaayaam janayaamaasa dhasa puthraan sa aathmavaan

10ம் இடம்

தொழில், கர்மம், ஞானம், ராஜ்ய ஆதிபத்யம், ஜீவன ஸ்தானம். நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

தஸ்யாவநிஜ்ய சரணௌ ததபக ஸ்வமூர்த்நா பிப்ரஜ்ஜகத்குருதரோபி ஸதாம் பதிர்ஹி
ப்ரஹ்மண்ய தேவ இதி யத் குணநாம யுக்தம் தஸ்யைவ யச்சரண சௌசமசேஷ தீர்த்தம்

thasyaavanijya saranow thathapaga swamoorthnaa bibraj jagadhguru tharopi sathaam pathirhi
brahmanya dheva ithi yath gunanaama yuktham thasyaiva yascharana sowsa masesha theertham

11ம் இடம்

மூத்த சகோதர ஸ்தானம், லாபம். நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

ஜ்ஞானம் விவேகோ நிகமஸ்தபஸ்ச ப்ரத்யக்ஷ மைதிஹ்யம் அதாநுமானம்
ஆத்யந்தயோரஸ்ய யதேவ கேவலம் காலச்ச ஹேதுச்ச ததேவ மத்யே

gnaanam viveko nigamasthapascha prathyaksha maidhihyam athaanumanam
aadhyantha yorasya yatheva kevalam kaalascha hedhuscha thatheva madhye

12ம் இடம்

செலவு, தூக்கம், மோக்ஷம். நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

நாம சங்கீர்த்தனம் யஸ்ய ஸர்வ பாப ப்ரணாசனம்
ப்ரநாமோ துக்க சமனஸ்தம் நமாமி ஹரிம் பரம்

naama sangeerthanam yasya serva paapa pranaasanam
pranaamo dhukka samanastham namaami harim param


 

அம்ருத சஞ்ஜீவினி மந்திரம்

 

முப்பத்து முக்கோடி தேவர்கள்

ஹிந்துமத்த்தில் நம்முடைய தெய்வங்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடும் போது முப்பத்து முக்கோடி தேவர்கள் என்று கூறிவது உண்மைதான்

முப்பத்து முக்கோடி என்பது 33 கோடி ஆகும்.

ஓ அப்படியானால் நமது ஹிந்து தர்மத்தில் 33 கோடி தெய்வங்கள் இருக்கின்றனவா? சார்

தம்பி இங்கே “கோடி” என்பதை எண்ணிக்கையைக் குறிக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்

ஆனால் “கோடி” என்ற சொல் எங்கள் சமஸ்க்ருதத்தில் “ பிரிவு அல்லது வகை” என்பதைக் குறிக்கும்.

ஆக மொத்தம் 33 வகையான தெய்வங்கள் ஹிந்து சனாதன தர்மத்தில் உள்ளன என்பதை சொல்லவே முப்பத்து முக்கோடி என்கின்றனர்

என்னசார் கோடி என்றால் பிரிவு என்கிறீர்கள் அது நம்பராகாதா?

தம்பி கிராமங்களில் ஒருவர் அந்த தெரு கோடியிலுருந்து வரேன் என்றால் கோடி தெரு என்பதல்ல அர்தம் அதாவது அந்த தெருவின் பிரிவிலிருந்து வருகிறேன் என்பர்

அது போல் கோடி வேஷ்டி என்றால் ஒரு கோடி வேஷ்டி எனபதல்ல அர்த்தம் அது வெண்மையும் அல்லாத மஞ்சளும் அல்லாத ஒரு கலர் வேஷ்டி ( வெள்ளாவியில் வண்ணார் வைத்தால் வெள்ளையாகி விடும் எனவே அதை கோடி வெளுப்பாக கொடு என்பர் ஊர்களில்)

கோடி என்பது எண்ணிக்கை அல்ல அதன் உண்மையான அர்தம் “பிரிவு” என்பதே

இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால் வசு ருத்ர ஆதித்ய ரூபம் என்று மூன்றாகப் பிரிப்பர்

நாங்களோ அல்லது உங்களை போன்றவர்களோ பொதுவாக அமாவாசை தர்பணத்தில் பித்ரு வசு ரூபமாகவும் பிதாமஹர் ருத்ர ரூபமாகவும் பிதுர்பிதாமஹர் ஆதிதய ரூபமாகவும் உள்ளதாக கூறி தர்பணம் செய்வோம்

அதில் வசு கீழ் நிலை ருத்ரர் இரண்டாம் நிலை ஆதித்யர் மூன்றாம் நிலை இந்த மூன்று நிலையில் 31பிரிவுகள் அடங்கும்

அந்த 31 பிரிவுகள் எவை பார்பபோம்

31 அதில்

ஆதித்ய நிலையில் 12 பிரிவுகள்

1) விஷ்ணு

2)தாதா

3) மித

4) ஆர்யமா

5) ஷக்ரா

6) வருண

7) அம்ஷ

8) பாக

9) விவாஸ்வான்

10) பூஷ

11) ஸவிதா

12) தவாஸ்தா

வசு நிலையில் 8 வகையாவன:

13. தர

14. த்ருவ

15. சோம

17. அனில

18. அனல

19. ப்ரத்யுஷ

20. ப்ரபாஷ

ருத்ரன் நிலையில் 11 பிரிவுகள்

21. ஹர

22. பஹூரூப

23. த்ரயம்பக

24. அபராஜிதா

25. ப்ருஷாகாபி

26. ஷம்பூ

27. கபார்தி

28. ரேவாத்

29. ம்ருகவ்யாத

30. ஷர்வா

31.கபாலி

மற்றும் 2 பிரிவு அஷ்வினி குமாரர்கள்

ஆக மொத்தம் = 33 வகையான

( பிரிவுகளான) தெய்வங்கள்

முப்பத்து முக்கோடி என்பது இதை தான் புரிந்ததா நீ நினைப்பது போல் 33 கோடியும் இல்ல முப்பத்துமுக்கோடியும் இல்ல சரியா

இனிமேல் கோவில்களில் இந்து தெய்வங்களை வழிபடும் போது இதை மனதில் வைத்து கொண்டு வழிபடுங்கள்

 

ஶிவபஞ்சாநநஸ்தோத்ரம்

॥ ஶிவபஞ்சாநநஸ்தோத்ரம் ॥

ப்ராலேயாசலமிந்து³குந்த³த⁴வளம் கோ³க்ஷீரபே²நப்ரப⁴ம்
ப⁴ஸ்மாப்⁴யங்க³மநங்க³தே³ஹத³ஹநஜ்வாலாவலீலோசநம் ।
விஷ்ணுப்³ரஹ்மமருத்³க³ணார்சிதபத³ம் ருʼக்³வேத³நாதோ³த³யம்
வந்தே³ঽஹம் ஸகலம் கலங்கரஹிதம் ஸ்தா²ணோர்முக²ம் பஶ்சிமம் ॥ 1॥

கௌ³ரம் குங்குமபங்கிலம் ஸுதிலகம் வ்யாபாண்டு³கண்ட²ஸ்த²லம்
ப்⁴ரூவிக்ஷேபகடாக்ஷவீக்ஷணலஸத்ஸம்ஸக்தகர்ணோத்பலம் ।
ஸ்நிக்³த⁴ம் பி³ம்ப³ப²லாத⁴ரம் ப்ரஹஸிதம் நீலாலகாலங்க்ருʼதம்
வந்தே³ யாஜுஷவேத³கோ⁴ஷஜநகம் வக்த்ரம் ஹரஸ்யோத்தரம் ॥ 2॥

ஸம்வர்தாக்³நிதடித்ப்ரதப்தகநகப்ரஸ்பர்த்³தி⁴தேஜோமயம்
க³ம்பீ⁴ரத்⁴வநி ஸாமவேத³ஜநகம் தாம்ராத⁴ரம் ஸுந்த³ரம் ।
அர்தே⁴ந்து³த்³யுதிபா⁴லபிங்க³லஜடாபா⁴ரப்ரப³த்³தோ⁴ரக³ம்
வந்தே³ ஸித்³த⁴ஸுராஸுரேந்த்³ரநமிதம் பூர்வம் முக²ம் ஶூலிந: ॥ 3॥

காலாப்⁴ரப்⁴ரமராஞ்ஜநத்³யுதிநிப⁴ம் வ்யாவ்ருʼத்தபிங்கே³க்ஷணம்
கர்ணோத்³பா⁴ஸிதபோ⁴கி³மஸ்தகமணி ப்ரோத்பு²ல்லத³ம்ஷ்ட்ராங்குரம் ।
ஸர்பப்ரோதகபாலஶுக்திஸகலவ்யாகீர்ணஸச்சே²க²ரம்
வந்தே³ த³க்ஷிணமீஶ்வரஸ்ய வத³நம் சாத²ர்வவேதோ³த³யம் ॥ 4॥

வ்யக்தாவ்யக்தநிரூபிதம் ச பரமம் ஷட்த்ரிம்ஶதத்த்வாதி⁴கம்
தஸ்மாது³த்தரதத்வமக்ஷரமிதி த்⁴யேயம் ஸதா³ யோகி³பி:⁴ ।
ஓங்காரதி³ ஸமஸ்தமந்த்ரஜநகம் ஸூக்ஷ்மாதிஸூக்ஷ்மம் பரம்
வந்தே³ பஞ்சமமீஶ்வரஸ்ய வத³நம் க²வ்யாபிதேஜோமயம் ॥ 5॥

ஏதாநி பஞ்ச வத³நாநி மஹேஶ்வரஸ்ய
யே கீர்தயந்தி புருஷா: ஸததம் ப்ரதோ³ஷே ।
க³ச்ச²ந்தி தே ஶிவபுரீம் ருசிரைர்விமாநை:
க்ரீட³ந்தி நந்த³நவநே ஸஹ லோகபாலை: ॥

இதி ஶிவபஞ்சாநநஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ॥

 

திரேகாண பதிவு

ஜோதிட நண்பர்கள் கேட்டு கொண்டதற்க்கு கேட்டதற்க்கு இணங்கி இரண்டு ஆண்டுக்கு முன்பு எழுதிய 22ம் திரேகாண பதிவு இது…

ஆயுளை நிர்ணயம் செய்யும் 22ம் திரேகாணம்
மேஷத்தில் திரேகாணம் 22 ஆக அமைந்தால்
1] மேஷலக்னத்தின் முதல் திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால்
அவருக்கு பாவர்கள் சேர்க்கையும் பார்வையும் 8ம் இடம் பெற அவருக்கு ஜலம். சர்ப்பம், விஷம் பித்தம் போன்றதால் மரணம் சம்பவிக்கும்
2] மேஷத்தின் மத்திய [நடு] திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால்
அவருக்கு ஜலம், புழுக்கள்,வனம் போன்றதில் மரணம் சம்பவிக்கும்
3] மேஷத்தின் மூன்றாம் திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால்
அவருக்கு குளம்,குட்டை,ஆறு,கிணறு,வாய்க்கால்,சமுத்திரம் போன்றதில் விழுந்து மரணத்தை தழுவும் நிலையை தரும்
ரிஷபத்தில் திரேகாணம் 22 ஆக அமைந்தால்
4] ரிஷபத்தில் முதல் திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால்
அவருக்கு நாற்கால் ஜீவராசிகளால் தான் அதிகமாக மரணத்தை தழுவும் அமைப்பு இருக்கும்
5] ரிஷபம் மத்திய [நடு] திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால்
அவருக்கு பித்தத்தால் அல்லது நெருப்பால் ,வாதம் முதலிய கொடுநோய் மற்றும் திருடர்களால் தாக்கப்பட்டு மரணம் அடையும் தன்மையை தரும்
6] ரிஷபம் மூன்றாம் திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால்
அவருக்கு வாகன விபத்து யுத்தங்களில் ஆயுதத்தால் தாக்கப்பட்டும் குதிரை மாடு அல்லது எருமை போன்ற நாற்கால் ஜீவராசிகளால் ஏற்படும் துன்பத்தால் மரணம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்
மிதுனம் திரேகாணம் 22 ஆக அமைந்தால்
7] மிதுனம் முதல் திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால்
அவருக்கு காசநோய் ,ஆஸ்துமா,இலைப்பு போன்ற சளித்தொல்லைகள் மூலமாக ஜாதகருக்கு மரணத்தை தரும் அமைப்பு ஆகும்
8] மிதுனம் மத்திய [நடு] திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால்
அவருக்கு ஜன்னி உபாதையால் , விஷம் ,மாடு,எருமையால் மசைநாய் கடி , மதம்பிடித்த யானையால் தாக்குதல் ஆவதால் மரணம் ஏற்படும் வாய்ப்பு உண்டு
9] மிதுனம் கடைசி திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால்
அவருக்கு காற்று [வாயு] வாள் , நாற்கால் ஜீவராசிகள்,யானையால் தாக்கப்படுதல் மலையில் அல்லது உயரமான இட்த்தில் இருந்து விழுதல் போன்றதால் வனத்தில் காணாமல் போய் விழுந்து மரணம் அடைதல் போன்றதால் உயிருக்கு பங்கம் தரும்
கடகம் திரேகாணம் 22 ஆக அமைந்தால்
10] கடகம் முதல் திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால்
அவருக்கு முதலை போன்ற துஷ்டர்கள் போன்றோர்களால் சுவப்னம் போன்றவற்றால் மரணம் சம்பவிக்கும்
11] கடகம் மத்திய [நடு] திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால்
அவருக்கு அடிதடி அல்லது இடி விழுதல் விஷம் உண்டல் பயத்தின் காரணமாக மரணம் சம்பவிக்கும்
12] கடகம் கடைசி திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால்
அவருக்கு ஈரல் பாதிப்படைதல் குஷ்டம் போன்ற பிரமேகத்தின் காரணமாக மரணம் ஏற்படுத்தும்
சிம்மம் திரேகாணம் 22 ஆக அமைந்தால்
13] சிம்மத்தின் முதல் திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால்
அவருக்கு ஜலத்தில் விழுவதால் ,பாதரோகத்தால் , மரணத்தை தரும் அமைப்பாகும்
14] சிம்மத்தின் மத்திய [நடு] திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால்
அவருக்கு ஜல முதலிய கண்டமும் வனப்பிரதேசத்தில் மரணமும் சம்பவிக்கும்
15] சிம்மத்தின் கடைசி திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு விஷத்தால் அல்லது ஆயுதத்தால் அடிதடியால் மோதலால் விழுதலால் மரணம் ஏற்படும் அமைப்பு தரும்.
கன்னி திரேகாணம் 22 ஆக அமைந்தால்
16] கன்னியின் முதல் திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு தலைநோய் வாதநோய் போன்றதால் சரீரம் கெட்டு மரணம் ஏற்படுத்தும்
17] கன்னியின் மத்திய [நடு] உறக்கத்தில் மற்றும் துஷ்டஜந்துக்கள் ,வனத்தில் மிருக தாக்குதல் மற்றும் அரச தண்டனைக்கு உட்படுதல் போன்றதால் மரணம் சம்பவிக்கும்
18] கன்னியின் கடைசி திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு அன்பாக வளர்க்கப்பட நாற்கால் ஜீவராசியால் அல்லது ஆசைநாயகியால் சமைக்கப்பட்ட உணவின் விஷத்தின் காரணமாக அல்லது மது [சோமபானம்] அளவிற்க்கு அதிகமாக அருந்துவதால் மரணம் ஏற்படும்
துலாம் திரேகாணம் 22 ஆக அமைந்தால்
19] துலாம் முதல் திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு
ஸ்திரிகளால் அல்லது நாற்கால் ஜீவராசியால் கீழே விழுவதால் மரணத்தை தழுவும் நிலையை தரும்
20] துலாம் மத்திய [நடு] திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு ரத்தம் கெட்டுப்போய் அதை நிவர்த்தி செய்ய முடியாத காரணத்தால் மரணம் சம்பவிக்கும்
21] துலாம் கடைசி திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு
சர்ப்பம், தேள், விஷகடியாலும் ஜலத்தால் அல்லது ஜலத்தில் வாழும் ஜந்துக்களால் மரணத்தை தரும்
விருட்சிகம் திரேகாணம் 22 ஆக அமைந்தால்
22] விருட்சிகம் முதல் திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு விஷத்தால் அல்லது ஆயுதம் தாக்கப்பட்டதால் ஸ்திரிகள் சமையலில் விஷத்தை வைப்பதால் மரணம் தரும்
23] விருட்சிகம் மத்திய [நடு] திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு மூத்திரம் கெடுவதால் உடலில் உப்பு சம்பந்தமான நோய் போன்றதால் மரணம் சம்பவிக்கும்
24] விருட்சிகம் கடைசி திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு கணுக்கால் எலும்பு முறிவில் ஏற்படும் உபத்திரம் அல்லது கல்லால் அடிவாங்கியோ மரணத்தை தரும் அமைப்பு அமையும்
தனுசு திரேகாணம் 22 ஆக அமைந்தால்
25] தனுசு முதல் திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு குஷ்டநோய் மற்றும் வாதநோய் போன்றதால் மரணம் அமையும்
26] தனுசு மத்திய [நடு] திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு விஷத்தால் அல்லது வாதநோய் போன்ற வியாதியால் மரணம் அமையும்
27] தனுசு கடைசி திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு ஜலமத்தியில் அல்லது ஜலத்தில் விழுந்தும் அல்லது ரத்தம் கெட்டுபோன நோயாலும் மரணத்தை தழுவுவர்
மகரம் திரேகாணம் 22 ஆக அமைந்தால்
28] மகரம் முதல் திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு அரசதண்டனை அல்லது காட்டு விலங்குகள் தாக்கப்படதால் ஜலத்தில் வாழும் ஜந்துக்களால் மற்றும் சர்ப்ப கணம் [பாம்பால் ஆபத்து] போன்றவற்றில் மரணத்தை தரும் சம்பவங்கள் மூலமாக மரணம் ஏற்படுத்தும் [தொடைகளுக்கு நடுவில் ஏற்படும் மோகத்தால் வரும் வியாதியை இங்கே சேர்ந்து கவனிக்கலாம்]
29] மகரம் மத்திய [நடு] திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு நெருப்பு மற்றும் ஆயுதம் போன்றதால் திருடர்களால்தாக்கப்பட்டும் [மனிதர்கள் இல்லாமல் தெய்வங்கள் மற்றும் தேவர்களின் கோபத்தால் கூட மரணத்தை உண்டாக்கும் என்கிறது சில நூல்கள்]
30] மகரம் கடைசி திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு ஸ்திரிகளின் சாபத்தை வாங்கி அதனால் ஏற்படும் பாதிப்பால் மரணத்தை தரும்
கும்பம் திரேகாணம் 22 ஆக அமைந்தால்
31] கும்பத்தின் முதல் திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு ஸ்திரிகளால் ஏற்படும் ஆபத்தால் ஜலத்தால் ரத்தம் கெட்டுபோவதால் மலையில் வனத்தில் வாழும் மிருகங்கள் போன்ற காரணத்தால் மரணத்தை ஏற்படுத்தும்
32] கும்பத்தின் மத்திய [நடு] திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு ஸ்திரிகள் மூலமான துன்பத்தினால் அல்லது உடலில் ஏற்படும் தோல்நோய் சமபந்தமான காரணமும் அமைந்து மரணம் தரும் அமைப்பாகும்
33] கும்பத்தின் கடைசி திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு சொந்தபந்தத்தாலும் அல்லது செல்ல பிராணியாக இருக்கும் சொந்த நாயாலும் உயிருக்கு பங்கம் தரும்
மீனம் திரேகாணம் 22 ஆக அமைந்தால்
34] மீனம் முதல் திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு
குன்மம், ரத்தமாக போகும் வயிற்றுப்போக்கு வயிற்றில் ஏற்படும் மர்ம நோய் போன்றதால் மரணத்தை தரும்
35] மீனத்தின் மத்திய [நடு] திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு ஜலத்தின் மத்தியில் பரிசல் படகு கப்பல் போன்றவை மூழ்குவதாலும் ஜல கண்டத்தாலும் மரணம் சமப்விக்கும்
36] மீனத்தின் கடைசி திரேகாணம் ஒருவருக்கு 22 ஆக அமைந்தால் அவருக்கு மோகத்தால் வரும் கெட்ட நோய் அல்லது மர்மநோய் கொண்டும் மரணம் தரும்
குறிப்பு:–
புதியதாய் ஜோதிடத்தை பயில்வோர்கள்
இந்த திரேகாணம் என்பது பற்றி கொஞ்சம் அடிப்படையாக அனுபவ ஜோதிடர்களை அணுகி கலந்தாய்வுகள் செய்து மேலும் தன்னை சுற்றி மரணத்தை தழுவிய சிலர் ஜாதகங்களை எல்லாம் ஆய்வுக்கு எடுத்து தன்னுடைய ஜோதிடபுலமையை விருத்தி செய்யுங்கள்
அதைவிட முக்கியம் உங்களிடத்தில் ஜோதிடம் பார்க்க வரும் வாடிக்கையாளர்களை 22 ம் திரேகாணத்தை பற்றி பேசி மிரள வைக்காதீர்கள் ..எதையும் கொஞ்சம் பக்குவமாக கையாள வேண்டும்.. உங்கள் அனுபவத்தில் ஒரு விஷயம் பொருந்தி போனால் மட்டுமே அடித்து பேசி பலாபாலனை சொல்லலாம்!!